அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 21 ஏப்ரல், 2010

காரின் முன் பகுதியில் சடலம் தொங்கி கொண்டிருக்க 4 மைல் பயணம் செய்த யுவதி

88 வயோதிப பெண்மணியின் சடலம் காரின் முன்பகுதியில் தொங்கிக் கொண்டிருக்க 4 மைல் தொலைவிற்கு அக்காரை ஓட்டிச் சென்ற யுவதியொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

சிகோ சதோ (Michiko Sato 23 வயது) என்ற மேற்படி யுவதி காரில் சென்றபோது, அவரது கார் மேற்படி வயோதிப பெண்ணின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் வயோதிப பெண்ணின் உடல் காரின் முன்பகுதியில் தொங்கிய நிலையில், யுவதி காரை நிறுத்தாது டோக்கி யோவின் வடக்கேயுள்ள தனது வீட்டுக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சிகோ சதோவின் காதலர் தனது காதலியின் காரில் சடலமொன்று தொங்கிக் கொண்டிருப்பதை அவதானித்து அது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து பொலிஸார் சிகோ சதோவை கைது செய்துள்ளனர்.

விபத்து நடந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் தான் அதிர்ச்சியடைந்து போயிருந்ததாக சிகோ சதோ பொலிஸாரிடம் தெவித்துள்ளார்.

அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் 17 வருட சிறைத் தண்டனையும் 13,500 ஸ்ரேலிங் பவுண் தண்டப்பண விதிப்பையும் எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக