அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 21 ஏப்ரல், 2010

டைட்டானிக் பயணியின் அந்தரங்க கடிதம் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு ஏலத்தில் விற்பனை

98 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பில் பயணம் செய்த பயணியொருவரின் கடிதமொன்று ஏல விற்பனையில் 55,000 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போய் சாதனை படைத்துள்ளது.

மேற்படி கப்பலில் பயணம் செய்த வேளை அடோல்ப் சால்பியல்ட் என்பவரால் பிரித் தானியாவிலுள்ள தனது காதல் மனைவி ஜெர்ரூட்டிற்கு எழுதப்பட்ட 3 பக்கக் கடிதமே இவ்வாறு ஏல விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

அக் கடிதத்தில் டைட்டானிக் கப்பல் பயணத்தின் போதான தனது தினசரி வாழ்க்கை தொடர்பில் அடோல்ப் சால் பியல்ட் விபத்திருந்தார்.

A photograph of Rosa Abbott was sold for £35,000

1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி டைட்டானிக் கப்பல் பனிப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளாகி மூழ்கிய தில் 1517 பேர் உயிழந்தனர்.

விபத்து இடம்பெறுவதற்கு 5 நாட்களுக்கு முன் எழுதப்பட்ட இக் கடிதம் பிரித்தானியாவிலுள்ள அருங்காட்சியகமொன்றில் விலை போயுள்ளது.

வில்ட்ஷியலுள்ள டெவிஸஸ் எனும் இடத்தைச் சேர்ந்த ஹென்றி அல்ட்றிட்ஜ் அன் சன் ஏல விற்பனை நிலையத்தால் ஏலத்தில் விடப்பட்ட மேற்படி கடிதத்தை பெயரை வெளியிட விரும்பாத ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.
The letter fetched a record price at auction

ஆடம்பர கப்பலின் முதல் வகுப்பில் பயணம் செய்த பயணி, கப்பலின் பிரமாண்டம் மற்றும் அலங்காரம், உணவின் சுவை என்பவற்றை எத்தகைய கண்ணோட்டத்தில் நோக்கியிருந்தார் என்பதை இக்கடிதம் விபரிப்பதாக உள்ளதாக ஹென்றி அல்ட்றிட்ஜ் அன்ட் சன் நிறுவனம் தெவித்தது. டைட்டானிக் கப்பலின் முதல் வகுப்பில் 370 பயணிகள் மட்டுமே பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்து இடம்பெற்ற சமயம் கப்பலின் வரவேற்பு கூடத்தில் புகை பிடித்துக் கொண்டிருந்த சால்பியல்ட், 3 ஆம் இலக்க உயிர்காப்பு படகு மூலம் காப்பாற்றப்பட்டு கரையை சென்ற டைந்தார்.

அதன் பின் 1926 ஆம் ஆண்டு மரணமடைந்த சாபியல்ட் லண்டனிலுள்ள கோல்டன் கிறீன் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

மேலும் டைட்டானிக் மூழ்குவதற்கு முன் அக்கப்பலிலிருந்து வேறொரு கப்பலுக்கு இடமாறிய அதிகாரியான டேவிட் பிளேயருக்குச் சொந்தமான சாவிக் கொத்தானது இந்த ஏல விற்பனையில் 54,000 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது.

அத்துடன் டைட்டானிக்குடன் தொடர்புடைய ஒரு தொகுதி புகைப்படங்களும் இந்த ஏல விற்பனையில் வெவ்வேறு அரும்பொருட்கள் சேகப்பாளர்களுக்கு 100,000 ஸ்ரேலிங் பவுணுக்கு மேற்பட்ட தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மூழ்கிய கப்பலிலிருந்து மீட்கப்பட்ட “ரோஸா அபொட்' என்பவரது ஓவியம் மட்டும் 35,000 ஸ்ரேலிங் பவுணுக்கு விலை போயுள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக