அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 21 ஏப்ரல், 2010

குண்டு துளைக்காத ‘டி-சேர்ட்’

‘டி-சேர்ட்’டுகள் இளைய தலைமுறையி னரின் நாகரிக உடையாக இருக்கிறது. கட்டழகை பளிச்சிட்டு காட்டும் இந்த உடைகளை இளைஞர்கள் மட்டுமல்லாது இளம் பெண்களும் விரும்பி அணிகிறார்கள். தற்போது நவீன தொழில்நுட்பத்தில் குண்டு துளைக்காத டி-சேர்ட்டுகள் தயாரிக்கப்பட் டுள்ளன. சீனா, சுவிட்சர்லாந்து, தெற்கு கரோலினா நாட்டு ஆய்வாளர்கள் இணைந்து இதை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதற்காக வழக்கமாக பயன்படும் பருத்தி நூல் சில மாறுதலுக்கு உட்படுத்தப்படுகிறது. பருத்தியில் உள்ள கார்பனுடன் போரான் உலோகம் சேர்க்கப்படுகிறது. இதனால் போ ரான் கார்பைடு கலவை உருவாகிறது. இது தான் கதிர்வீச்சு கலன்களில் பயன்படுத்தப் படுகிறது. எனவே இதைக் கொண்டு தயாரிக்கப்படும் டி-சேர்ட்டுகள் குண்டு துளைக்காத தன்மையைப் பெறுகின்றன.

அத்துடன் சூரிய ஒளியின் புறஊதாக் கதிரின் தாக்குதல் மற்றும் ரேடியோ அலைகள், கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கிறது. மேலும் எடை இலேசான தாகவும் இருக்கும். இராணுவம் மற்றும் பொலிஸ் வீரர்களுக்கு ஏற்கனவே கவச உடைகள் உண்டு. அவை தடிமனாகவும், எடை கூடியதாகவும் இருக்கின்றன. அவர்களுக்கு எடைகுறைந்த மாற்று கவச உடையாக இந்த நவீன டிசர்ட்டுகளை வழங்க ஆய்வு கள் நடந்து வருகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக