அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

புதுவிதமான மிரட்டல்

வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விமான பைலட்டுகளை மிரட்டும் பயணிகள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்.

ஆனால் ஆஸ்திரேலிய விமானம் ஒன்றிலோ பயணி ஒரவர் தனது மனோ சக்தியை பயன்படுத்தியே விமானத்தை தரையிறக்கி விடுவேன் என்று மிரட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளாராம்.

சிட்னியிலிருந்து சிங்கப்பூர் விமானத்தில் அமர்ந்திருந்த அந்த பயணி தான் அபூர்வசக்தி கொண்டவன் என்றும், தனது மன ஆற்றலை பயன்படுத்தி விமானத்தை தரை இறங்கச் செய்துவிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.இதனையடுத்து விமான ஊழியர்கள் அவரிடம் பக்குவமாக பேசி கைவிலங்கு மாட்டி அமர வைத்து விட்டனராம். விமானம் சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்ட பிறகு அந்த பயணி காவலர்களிடம் ஒப்படைக் கப்பட்டார். ஆசாமி போதை பொருளை பயன்படுத்தியதால் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக