“லண்டன் றிவர்' திரைப்படத்தில் 7/7 குண்டுத் தாக்குதலையடுத்து தனது மகனிடமிருந்து செய்தி ஏதாவது வருமா என காத்திருக்கும் பிரெஞ்சு முஸ்லிம் ஒருவன் பாத்திரத்தில் நடித்தமைக்காக அவர் பெர்லின் திரைப்பட விழாவில் விருது வென்றார்.
முன்னாள் உத்தியோகபூர்வ உதைபந்தாட்ட வீரரான ஸொதிகுயி கோயத் நண்பர் ஒருவன் உதவியுடன் நடிகராக மாறினார்.
அவர் 1983 ஆம் ஆண்டு இங்கிலாந்து திரையரங்கு பணிப்பாளர் பீற்றர் புறூக்குடன் இணைந்து இந்தியக் கதையான “மகா பாரதம்' திரைப்படத்தில் பணியாற்றினார்.
தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் பீற்றர் புறூக்குடன் இணைந்து பணியாற்றினார்.
எண்ணற்ற நாடகங்களை எழுதி மேடை யேற்றிய அனுபவத்தைக் கொண்ட ஸொதி குயி கோயத், மாலிய தலைநகர் பமாகோவில் மன்டெகோ திரையரங்கை ஸ்தாபித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக