அப்பிரதேசங்களில் தற்போது நிலவுகின்ற அமைதியான சூழலில் வியாபாரம், விவசாயம், கைத்தொழில் போன்ற தொழில்துறைகள் துரிதமாக முன்னேறி வரு கின்றன. இந்த அமைதியைப் பயன்படுத்தி திருட்டுக் கும்பல்களும் தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளதாகவே நினைக்கத் தோன்றுகிறது.
வவுனியா பிரதேசத்தில் சாமியார் வேஷத்தில் திருடர்கள் நடமாடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வீடொன் றில் உள்ளோரை தந்திரமான முறையில் ஏமாற்றி நபர் ஒருவர் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளார். இது மாத்திரமன்றி சில வீடுகளில் ஆட்கள் இல்லாத நேரத்தில் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன. சில திருடர்கள் கத்தி, கைத்துப்பாக்கி போன்ற ஆயுதங் களை தம்வசம் வைத்திருந்ததாகவும் அப்பகுதி மக் கள் கூறியுள்ளனர்.
வீடுகளில் கொள்ளைகளில் ஈடுபடுவோர் உள்ளூர் திருடர்களாகவே இருக்க வேண்டுமென மக்கள் நம்பு கின்றனர். எவ்வாறாயினும் வவுனியாவின் சில பிர தேசங்களில் திருடர்கள் தொடர்பாக மக்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர். இச்சம்பவங்கள் அனைத்தும் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளன. திருடர்கள் குறி த்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பிரதேசத்திலும் இதுபோன்ற குற்றச்செயல் கள் சமீப காலமாக அதிகரித்துக் காணப்படுகின்றன. கொள்ளையர்களால் பொதுமக்கள் ஒருசிலர் வாள் வெட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. வீடுகளில் இருந்தோர் கொள்ளை யர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. கொள்ளையர்களில் ஒருசிலர் அகப்பட்டும் உள்ளனர்.
யாழ் குடாநாட்டில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்து வதற்காக பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்விடயத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டுமென பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். குற்றச்செயல்களை ஒழிப்பதாயின் பொதுமக்களின் ஒத்துழைப்பு பொலிஸாருக்கு மிகவும் அவசியம்.
ஆனாலும் திருட்டுக்கள், கொள்ளைகள் போன்றவற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்கு பொலிஸார் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அங்குள்ள மக்கள் எதிர்பார்க்கின்றனர். இல்லையேல் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதிக்கு அர்த்தம் இல்லாது போய் விடுமென்பதே மக்களின் எண்ணமாகும்.
வடக்கு, கிழக்கில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப் பட்ட பின்னர் அங்குள்ள மக்கள் தற்போது நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்ந்து வருகின்றனர். மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக முன் னேற்றமடைந்து வருகின்றன.
இவ்வேளையில் கொள்ளையர்கள் தலைதூக்குவதற்கு இடமளித்தால் மக்களின் இயல்பு நிலைமை பாதிக்க ப்படவே செய்யும். அதுமாத்திரமன்றி கொள்ளையர் கள் மீதான அச்சத்தினால் மக்களின் பொருளாதார முயற்சிகளும் பாதிக்கப்படக் கூடும்.
எனவே இவ்விடயத்தில் அங்குள்ள பொலிஸார் தீவிர முனைப்புடன் செயற்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டும். வடபகுதியில் தோற்றுவிக்கப்பட்டுள்ள இயல்பு வாழ்க்கை எவ்வித தடையுமின்றித் தொடர்வதற்கு பொலிஸார் உதவ வேண்டும். இதுவே அப்பகுதி மக்களின் வேண்டுகோள் ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக