அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 20 ஜூன், 2010

வேண்டாம்.... தயவுசெய்து வேண்டாம்.... இந்த விளையாட்டு

அவுஸ்திரேலியாவில் உள்ள திரையரங்கு ஒன்றின் வாயிலில் ராவணன் படம் பார்ப்பதற்காக கூட்டம் அலைமோதியது. எல்லாம் தமிழ் முகங்கள். 50% வீதம் தமிழ்நாடென்றால் மீதி ஈழத்தைச் சேர்ந்தவர்கள்.

படம் ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கியது. விசில்கள், கைதட்டல்கள் என்று இனம்புரியாத பெரிய ஆரவாரத்துடன் ஆரம்பமானது.

படம் தொடங்கி இடைவேளை விட்டார்கள். அதன்பிறகுதான் ரகளையே தொடங்கியது. எங்கோ வெளியில் இருந்து ஒரு கூட்டம் கடும் இரைச்சலோடு திரையரங்கினுள் நுழைந்தது, உள்ளிருந்த சுமார் ஆறு, ஏழு இளைஞர்களோடு உச்ச ஸ்த்தாணியில் வாக்குவாதப்பட ஆரம்பித்தது. எவர் பேசுகிறார், எவருடன் பேசுகிறார் என்று தெரியாத திரையரங்கின் இருட்டில் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகள் தவழ்ந்தன.ஒருவாறு இருபக்கத்திலும் சிலர் ஆளாளை இழுத்துப்பிடிக்க கூட்டம் அமைதியாக வெளியேறியது. அப்பாடா, நிம்மதியாகப் படம் பார்க்கலாம் என்று எல்லோரும் ஆசுவாசப்பட்டுக்கொண்டிருக்க மீண்டும் அந்தக் கூட்டம் உள்ளே நுழைந்து அங்கிருந்த அந்த இளைஞர் கூட்டத்தை சரமாரியாகத் தாக்கத் தொடங்கியது. எதற்கு அடிக்கிறார்கள், எவர் அடிக்கிறார்கள், அடிவாங்குபவர்கள் யாரென்றுகூடத் தெரியவில்லை. ஆனால் எவருக்கோ விழும் அடியின் அகோரம் திரையரங்கு முழுவதும் கேட்டது.

படம் பார்த்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் தனது கைய்யடக்கத் தொலை பேசியில் போலீஸைக் கூப்பிட்டார். சில நிமிடங்களில் திரையரங்கிருக்கும் அந்த தொடர்மாடி கட்டிடத்திற்கு காவல் அதிகாரிகள் வந்தார்கள். உள்ளே வந்து அந்த இளைஞர்களைக் கூட்டிச் சென்றுவிட்டார்கள். அதன் பிறகு எந்தச் சத்தமுமில்லை. ஆனால் அதற்குப்பின்னர் படம் பார்க்கும் மனோநிலை யாருக்கும் இருக்கவில்லை. யாரிந்த இளைஞர்கள், ஏன் அடித்தார்கள், யார் அடிவாங்கியது என்கிற கேள்விகள்தான் அவர்களின் மனதில் ஓடிக்கொன்டிருந்தது.

ஒருவாறு படம் முடிந்து வெளியே வந்தபோது. வாசலில் சில இளைஞர்கள், உள்ளிருந்தவர்கள் என்று நம்பப்படுகிறது, கண்கள் சிவந்து, வீங்கி, முகத்தில் அடி வீக்கங்களுடன் நிற்க, அருகில் அந்தக் காவல் அதிகாரிகள் யாரையோ தேடிக்கொண்டிருப்பது போல் காணப்பட்டார்கள்

அங்குள்ளவர்களிடம் என்ன நடந்தது என்று விசாரித்தபோது கிடைத்த விபரம் இதுதான். அதாவது "உள்ளேயிருந்தவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களாம், வெளியே இருந்து வந்து தாக்கியவர்கள் ஈழத் தமிழர்களாம். முன்னர் நடந்த வாக்குவாதத்தின் தொடர்ச்சிதான் உள்ளே நடந்ததாம்" என்று சொல்லி முடித்தார் ஒருவர்.

அடக்கடவுளே, அண்ணனும் தம்பியும் மோதுப்படுகிறோமே!!! இன்று எமக்காக குரல் கொடுக்கும், கொடுத்துக் கொண்டிருக்கும் எமது சொந்த இனத்துடனேயே அடிபாடா?? இது எங்கே போய் முடியப் போகிறது?? என்ன செய்கிறோம் என்று சிறிது சிந்தனையுமில்லமலா நாம் செயல்ப்படுகிறோம்??

நினைக்கவே வேதனையாக இருக்கிறது.

ஒன்று மட்டும் முடிவானது, தமிழகத்துத் தமிழனையும் விட்டால் எம்மைக் கேட்க நாய்கூடக் கிடையாது.

வேண்டாம்.... தயவுசெய்து வேண்டாம்.... இந்த விளையாட்டு Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக