அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

ஒரே சமயத்தில் 3 விலைமாதுகளுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட இத்தாலிய பிரதமர்

இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி ( Silvio Berlusconi ) தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் ஒரே சமயத்தில் 3 பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட இரகசியம் வெளியாகியுள்ளது.

73 வயதான பெர்லுஸ்கொனி புதன்கிழமை மாலை பித்தானிய பிரதமர் டேவிட் கமெரோனுடன் விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொள்ள தயாராகிக் கொண் டிருந்த வேளையிலேயே, மேற்படி பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விலைமாதான மரியா தெரேஸா டி நிகோலோ (Maria Teresa De Nicolo 38 வயது) என்பவரே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

கடந்த கோடை காலத்தில் பெர்லுஸ்கொனியின் பலஸ்ஸோ கிராஸியோலி வாசஸ்தலத்தில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் கலந்து கொள்வதற்கு மயா தெரேஸா டி நிகோலோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டு விசாரணையை எதிர் கொண்டுள்ள வர்த்தகர் ஒருவராலேயே அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

பெர்லுஸ்கொனி உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் 15 பெண்கள் வரை கலந்து கொண்டதாக மரியா தெரேஸா டி நிகோலோ தெரிவித் தார்.

இதன்போது தானும் ரோமைச் சேர்ந்த ஏனைய இரு பெண்களும் ஒரே சமயத்தில் பல மணி நேரம் பெர்லுஸ்கொனியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதாக மரியா தெரேஸா நிகோலோ கூறினார்.

மறுநாள் விடிந்ததும் பெர்லுஸ்கொனி தனக்கு விலையுயர்ந்த நகையொன்றை பரிசளித்ததாக அவர் தெவித்தார்.

விலை மாதுக்கள் மற்றும் இளம் பெண்களுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பெர்லுஸ்கொனி ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், ஒரே சமயத்தில் 3 விலை மாதுகளுடன் அவர் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக வெளியாகியுள்ள இந்த புதிய செய்தி அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக