அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 26 மார்ச், 2012

உடல் பருமனில் உலக சாதனை படைக்கும் யற்சியில் ஈடுபட்டுள்ள பெண் சமையல்கலை நிபுணரை மணந்தார் (படங்கள் இணைப்பு)

உலகிலேயே மிகவும் பருமனான பெண்ணாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க பெண்ணான சூஸன் இமான், சமையல்கலை நிபுணர் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.




பார்கர் கிளாக் (35 வயது) என்ற மேற்படி சமையல்கலை நிபுணரை திருமணம் செய்துள்ளமை குறித்து சூஸன் இமான் (33 வயது) விபரிக் கையில், “ எமது திருமண பொருத்தம் சொர்க்கத்தில் நிர்ணயிக்கப்பட்டது.

உணவு உண்பதை நான் விரும்புகிறேன். சமைப்பதை பார்கர் விரும்புகிறார். நான் உணவு உண்பதில் படைக்க விரும்பும் சாதனையை நிறைவேற்றுவதற்கு அவரால் உதவ முடியும்'' என்று கூறினார்.
இரு பிள்ளைகளின் தயாரான சூஸனின் நிறை 756 இறாத்தலாகும்.

அவர் 1200 இறாத்தலாக தனது நிறையை உயர்த்தி உலகின் மிகவும் பருமனான பெண்ணாக “ கின்னஸ்'' உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு எதிர்பார்த்துள்ளார். தனது கணவரான பார்கர் கிளாக் குறித்து சூஸன் விபரிக்கையில், “என்னை அவர் பால் ஈர்த்ததில் அவரது சமையலுக்கு முக்கிய பங்கு உள்ளது. அவர் எனக்கு பிடித்தமான உணவை மிகவும் சுவையாக சமைத்து தருகிறார். அதனால் என்னால் நாள் ழுவதும் உணவை சுவைத்து உண்ண முடிகிறது'' என்று கூறினார்.

தற்போது அரிஸோனா மாநிலத்திலுள்ள காஸா கிரான்ட் எனும் இடத்தில் சூஸனுடன் வசிக்கும் பார்கர் விபரிக்கையில், “அவளுக்கு (சூஸ னுக்கு) உதவி செய்வது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நான் பருமனான பெண்களையே மிகவும் நேசிக்கிறேன். எனினும் உடல் பருமனால் அவரது உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பது குறித்து கவலையாக உள்ளது. ஆனால் உணவு உண்ணுகையில் சூஸனின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை காணும்போது ஆறுதலாக உள்ளது'' என்று தெரிவித்தார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக