அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

மில்லியன் டாலர் ஹோம் பேஜ்

இங்கிலாந்தை சேர்ந்த அலெக்சுக்கு ஒரு மில்லியனர் ஆக வேண்டுமென்பது நீண்டநாள் கனவு. லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலம் எப்படி பணக்காரன் ஆகலாம் என்று யோசித்த அலெக்ஸ் செய்தது ஒன்றே ஒன்றுதான். அவர் செய்ததெல்லாம் ஒரு இணைய தளத்தை உருவாக்கியது தான்.




இணைய தளத்தின் இடத்தை பத்து லட்சம் சிறிய கட்டங்களாக பிரித்த அலெக்ஸ், ஒவ்வொரு கட்டமும் ஒரு டாலர் என்று விற்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும், புதுமையான விளம்பர உத்தியாக இருகின்றதே என்று, பெரிய நிறுவனங்கள் சில பிக்சல்களை பதிவு செய்து விளம்பரம் செய்ய முன் வந்தன. வாய்வழி தகவல்கள் மூலம், இந்த தளத்திற்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க, சில மாதங்களில் எல்லா கட்டங்களும் விற்று தீர்ந்தன. மிகக் குறுகிய காலத்தில் 1 மில்லியன்  சம்பாதித்து மில்லியனர் ஆனார் 21 வயதே ஆன அலெக்ஸ்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக