அழும்போது பெண்ணொருவரின் கண்ணிலிருந்து கண்ணீருடன் கூர்மையான வைரப் பளிங்குகள் வெளிப்படும் அதிசயம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. ஜோடி ஸ்மித் (35 வயது) என்ற மேற்படி பெண் கிஸ்டின் எனும் அமிலம் உற்பத்தியாகும் அரிய நோயொன்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி அமிலம் காரணமாக உருவான சிறிய பளிங்குகள் அவர் அழும் போது கண்ணீருடன் சேர்ந்து வைர நகைகள் போன்ற பிரகாசமுடைய பளிங்குகளாக வெளிப்படுகின்றன. இது தொடர்பில் ஜோடி விபரிக்கையில், “எனது அழு கையுடன் வெளிப்படும் பளிங்குகள் அழகான வைரங்கள் போன்று காணப் படுகின்றன. ஆனால் அவை கண்ணீருடன் வெளிப்படுகையில் எனக்கு பாரிய வேதனையைத் தருகின்றன'' என்று கூறினார்.
அத்துடன் சூரிய ஒளி கண்ணில் படும் போது கண்ணில் மண் விழுந்தது போ ன்று ஏற்படும் வலியால் தான் துடிதுடித்து போய்விடுவதாக ஜோடி கூறினார்.
ஜோடி தனது அழுகையாலேயே மரண மடைந்துவிடுவார் என மருத்துவர்கள் நம்பிய நிலையில், அவர் தொடர்ந்து உயிர்வாழ்வது அனைவரையும் ஆச் சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 9 வயதாக இருந்த போது முதலாவது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உள்ளான ஜோடி, அதன் பின் பாரிசவாத பாதி ப்புக்கு உள்ளானார்.
அதன்பின் தனது 26 ஆவது வயதில் இரண்டாவது சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உட்பட்ட ஜோடிக்கு தற்போது கண்களிலிருந்து பளிங்குருக்கள் விழும் விநோதப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக