அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 25 ஏப்ரல், 2012

பயர்பாக்ஸில் ஸ்பெல்பவுண்ட்

ஸ்பெல் பவுண்ட்(Spellbound). இது ஒரு ஆட் ஆன் புரோகிராம். இதன் சிறப்பு என்னவெனில், இது பீல்டுகள், படிவங்களின் கட்டங்கள் ஆகியவற்றில் ஏற்படும் பிழைகளையும் திருத்துகிறது. வேறு தகவல்களைத் தரும் கட்டங்களில் ஏற்படும் பிழைகளையும் சரி செய்திடுகிறது. 


இந்த ஸ்பெல் பவுண்ட் புரோகிராமினை பயர்பாக்ஸ் பிரவுசருக்காக டவுண்லோட் செய்திட, இணைய இணைப்பில், பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து, Tools>Add ons எனச் செல்லவும். பின்னர் மேலாக உள்ள   “Get Addons”  என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து   “Browse All Addons” என்பதில் கிளிக் செய்திடவும். இது தானாக,  மொஸில்லாவின் ஆட் ஆன் புரோகிராம்கள் உள்ள இணைய தளத்திற்கு  உங்களை இட்டுச் செல்லும். இங்கு உள்ள சர்ச் கட்டத்தில் Spellbound என டைப் செய்திடவும். பின்னர் அருகே உள்ள பச்சை அம்புக் குறியின் மீது கிளிக் செய்திடவும்.

அடுத்து Add to Firefox   என்ற பட்டனில் கிளிக் செய்திடுங்கள். பின்னர் திரையில் கிடைக்கும் செயல்பாடுகளுக்கு உங்கள் பதிலை அளித்துச் செல்லவும். இந்த புரோகிராம் பதியப்பட்டு, இனி நீங்கள் டைப் செய்திடும் சொற்கள், அவை எந்த இடத்தில் இருந்தாலும், எழுத்துப் பிழை இருந்தால் சரி செய்யப்படும். இந்த பிழைகள் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதனையும், நீங்கள் இங்கு கிடைக்கும் டயலாக் பாக்ஸ் மூலம் செட் செய்திடலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக