அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 25 ஏப்ரல், 2012

phishing என்று அடிக்கடி கேள்விப் படுவதன் சரியான பொருள் என்ன?

கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்களைத் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்க சிலர் செய்திடும் சில்மிஷத்திற்கு இந்த பெயர் வைத்திருக்கிறார்கள்.


எடுத்துக்காட்டாக உங்களுக்கு மின்னஞ்சல் கடிதம் ஒன்று வரும். அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஸ்பைவேர்களை நாங்கள் இலவசமாகச் சோதனை செய்து எடுத்துத் தருகிறோம். அதுவும் இலவசம் என்று பிரபலமான மைக்ரோசாப்ட் அல்லது நார்டன் ஆண்டி வைரஸ் தளத்திலிருந்து செய்தி போன்று வரும். குறிக்கப்பட்டிருக்கும் இணைய தளத்தின் முகவரியும் அதே நிறுவனங்கள் முகவரிகளாகத் தெரியும்.

ஆனால் உண்மையில் நடப்பது என்னவென்றால் அதில் கிளிக் செய்திடுகையில் நீங்கள் வேறு ஒரு தளத்திற்கு இழுத்துச் செல்லப் படுவீர்கள்.

அங்கு சென்றவுடன் உங்கள் கம்ப்யூட்டரை உங்களுக்குத் தெரியாமலேயே  அவர்கள் அடிமைப்படுத்துவார்கள். உங்கள் மானிட்டரை கருப்பாக்கி மகிழ்வார்கள்.  இதற்குப் பல வழிகளைக் கையாளுவார்கள். இதற்குத்தான்   phishing என்று பெயர்.  Fishing  என்றால் மீன் பிடித்தல்; தூண்டில் போட்டு மீனைச் சிக்க வைப்போம். இங்கு கம்ப்யூட்டரில் உங்களுக்கு ஆசை காட்டி, உங்கள் கம்ப்யூட்டரைப் பிடிப்பதற்கு பெயர் phishing.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக