அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

மனச்சாட்சி இல்லையா?

ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் இளைஞன் ஒருவன் தனது உயர் அதிகாரியிடம் சென்று ஒரு நாள் லீவு தருமாறு கேட்டான்.
என்ன உனக்கு ஒரு நாள் லீவு வேண்டுமா? எங்கே உனது வேண்டுகோளை எவ்வாறு பரிசீலிக்கலாம் என்றுதான் பார்ப்போமே என்று கூறிய அதிகாரி தொடர்ந்து கதைத்தார்.


ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்கின்றன. அத்துடன் ஒரு வருடத்தில் இருக்கின்ற 52 வாரங்களில் ஒரு வாரத்திற்கு இரண்டுநாள் லீவு வீதம் உங்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. அதனால், 261 நாட்கள் மாத்திரமே உங்கள் கடமைக்கென்று எஞ்சியிருக்கின்றது.

தினமும் 16 மணித்தியாலங்கள் நீங்கள் கடமையில் இருந்து வெளியேதான் இருக்கிறீர்கள். அதனால் 170 நாட்கள் கடமைக்குப் புறம்பாகவே பயன்படுத்துகிறீர்கள். 91 நாட்கள் மாத்திரமே  கடமைக்காக எஞ்சியிருக்கிறது.

தேநீர் இடைவேளைக்காக ஒவ்வொருநாளும் 30 நிமிடங்களைச் செலவு செய்கிறீர்கள். இதை மொத்தமாகப் பார்த்தால் வருடாந்தம் நீங்கள் தேநீர் இடைவேளைக்காக 23 தினங்களைச் செலவுசெய்து வருகிறீர்கள். 68 நாட்கள் மாத்திரமே கடமைக்காக எஞ்சியிருக்கிறது.

தினமும் மதிய உணவு இடைவேளைக்காக ஒரு மணித்தியாலத்தை எடுத்துக்கொள்கிறீர்கள். இதற்காக வருடாந்தம் 46 நாட்கள் செலவாகி விடுகிறது. கடமைக்கென இருப்பது ஆக 22 நாட்கள் மாத்திரமே.

நீங்கள் வழமையாக ஒரு கிழமையில் 2 நாட்கள் சுகவீனலீவு எடுத்துக்கொள்கிறீர்கள். இதனால் வெறுமனே 20 நாட்கள் மாத்திரமே ஒரு வருடத்தில் கடமைக்காக மிஞ்சுகிறது.

ஒரு வருடத்தில் எமது நிறுவனம் சகல் ஊழியர்களுக்குமே 5 நாட்கள் விசேட விடுமுறை வழங்குகிறது. இதனால் மொத்தத்தில் 15 நாட்கள் மாத்திரமே நீங்கள் கடமையச் செய்வதற்கு எஞ்சுகிறது.

சுற்றுலாவுக்கென வருடாந்தம் 14 நாட்கள் சகல ஊழியர்களுக்கும் நாம் விடுமுறை வழங்குகின்றோம். ஆக ஒருநாள் மாத்திரமே கடமைக்காக எஞ்சுகிறது.

அந்த ஒரு நாளுக்கும் லீவு கேட்டு வருவதற்கு உங்களுக்கு மனச்சாட்சி இல்லையா?
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக