அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 25 ஏப்ரல், 2012

பயர்வால் (Firewall)

உங்களின் கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள பயர்வால், சில வேளைகளில், இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில், யாரோ ஒருவர் உங்களின் கம்ப்யூட்டருக்குள் வர முயற்சிப்பதாகக் காட்டி, சில எண்களின் தொகுப்பினைக் காட்டுகிறது. இது யாருடைய இணைய அடையாள எண் என எப்படிக் கண்டறிவது?


Start அழுத்திப் பின் Run  பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும். இதில் cmd  என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது டாஸ் திரை கிடைக்கும். இதில் உங்கள் கட்டளைக்காக ஒரு புள்ளி அல்லது சிறு கோடு துடித்துக் கொண்டிருப்பதனைக் காணலாம். அங்கு   nslookup என்று டைப் செய்து தொடர்ந்து ஒரே ஒரு இடைவெளியிட்டு, உங்கள் பயர்வால் கொடுத்த எண்ணை டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது அதற்கான தளத்தின் பெயர் கிடைக்கும்.  பின் இந்த தளம் சென்று, நீங்கள் அனுமதிக்கக் கூடிய தளம்தானா என உறுதி செய்து கொள்ளலாம்.

கூடுதலாக ஒரு செய்தி சொல்லட்டுமா! இப்போது செய்ததைபின் நோக்கியும் செய்து பார்க்கலாம். nslookup  என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் இடைவெளியிட்டு, உங்களுக்குத் தெரிந்த ஓர் இணைய தள முகவரியை அமைத்து என்டர் தட்டவும். இப்போது அந்த இணைய முகவரிக்கான டிஜிட்டல் எண் கிடைக்கும்.  விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், “Command”  (மேற்கோள் குறிகள் இல்லாமல்)என சர்ச் பாக்ஸில் டைப் செய்தால், டாஸ் பக்கம் கிடைக்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக