அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 25 ஏப்ரல், 2012

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8

விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து, பிரவுஸிங் செய்கையில், இன்டர்நெட் பக்கங்களின் எழுத்து மிகவும் சிறியதாக உள்ளது. வெப்சைட் காட்டப்படும் எழுத்தின் அளவினை நிரந்தரமாக மாற்ற என்ன வழி?
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8, இணையப் பக்கங்களை ஸூம் செய்து, பெரிய எழுத்துக்களில் பக்க எழுத்துக்களை அமைக்க வழி தருகிறது. இது நாமாக பக்க எழுத்துக்களை பெரிதாகவும் சிறிதாகவும், அவ்வப்போது அமைக்கும் வழி. இதனுடனாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, தானாகவே பெரிய எழுத்தாகக் காட்டச் செய்யும்படி அமைக்கவும் முடியும்.



இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் திறந்து இயக்கவும். Tools  கிளிக் செய்து அதில் Internet Options  என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.  Appearance  என்ற டேப்பின் கீழ் Fonts என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் விரும்பும் அளவில் பாண்ட் அளவைக் கிளிக் செய்து ஓகே தட்டி வெளியே வரவும். இனி நீங்கள் அமைத்த பெரிய அளவிலான எழுத்துடன், இணையப் பக்கங்கள் காட்டப்படும்.  ஸூம் செய்திடும் முறை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்லிவிடுகிறேன். கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே, மவுஸின் வீலை முன் புறமாக உருட்டினால், பக்க எழுத்துக்கள் பெரிதாகும். கீழாக உருட்டினால், சிறிதாகும்.

உங்களின் பேவரைட் தளப்பட்டியலில் எளிதாகத் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில், அகரவரிசைப்படுத்த முதலாவதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 ஆகியவற்றில் இதனை எப்படி ஏற்படுத்துவது எனப் பார்க்கலாம்.

இந்த பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். பேவரைட்ஸ் என்பதில் கிளிக் செய்தால், அந்த மெனு விரிந்து கொடுக்கும். இதில் ஏதேனும் ஒரு போல்டர் அல்லது லிங்க்கில், ரைட் கிளிக் செய்திடவும். இதில் விரியும் மெனுவில் பல செயல்பாடுகளுக்கான பிரிவுகள் கிடைக்கும். இவற்றில்  Sort by Name  என்பதில் கிளிக் செய்திடுங்கள்.
உங்களுடைய Favourites  தளங்கள் அனைத்தும் அகரவரிசைப்படுத்தப்படும்.

உங்களுடைய பிரவுசர் மொஸில்லா பயர்பாக்ஸ் என்றால், அதனை இயக்கி, View என்பதில் இடது கிளிக் செய்திடவும். அதன் பின் Sidebar, Bookmarks    எனச் செல்லவும். Sidebar ஐக் கிளிக் செய்தால் Bookmarks  மெனு கிடைக்கும். அதில் ரைட் கிளிக் செய்தால், மீண்டும் ஒரு மெனு கிடைக்கும். இதில் Sort by Name  என ஒரு பிரிவு இருக்கும். இதில் லெப்ட் கிளிக் செய்திடவும். Bookmarks மெனுவினை விரித்து, அதன் இடது பக்கத்தில் உள்ள + அடையாளத்தில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் புக்மார்க்ஸ் அனைத்தும் அகரவரிசைப்படி அடுக்கப்பட்டிருக்கும்.

நீங்கள் கூகுள் குரோம் பிரவுசரினைப் பயன் படுத்துகிறீர்களா! இங்கு சற்று வித்தியாசமான முறையில் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். பிரவுசரை  இயக்கிக் கொள்ளவும்.  வலது மூலையில் குழாய் ரிப்பேர் செய்திடும் சாதனப் படம் ஒன்று காட்டப்படும். அதனை லெப்ட்  கிளிக் செய்திடவும். பின்னர், Bookmark Manager  என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இப்போது ஒரு புதிய டேப் திறக்கப்படும். இந்த டேப்பின் இடது பக்கம் சைட் பார் ஒன்று கிடைக்கும். இதில் உள்ள   Bookmark Manager –ல் ரைட் கிளிக் செய்தால், Reorder Items என்று ஒரு பிரிவினைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்தால், புக்மார்க்ஸ் அனைத்தும் அகரவரிசைப் படுத்தப்பட்டிருப்பதனைக் காணலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக