அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 23 அக்டோபர், 2012

புலி உறுப்பினருக்கு 35 வருட சிறை!

புலிகள் இயக்க உறுப்பினரான சண்முகலிங்கம் சூரியகுமார் என்பவருக்கு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு உதவி, ஒத்தாசை வழங்கினார் என்கிற வழக்கில் கேகாலை மேல்நீதிமன்றத்தால் 35 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தபோது கொழும்பில் இராணுவ தலைமையகத்தில் வைத்து 2006 ஆம் ஆண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் பலத்த காயங்களுக்கு உள்ளான பொன்சேகா மயிரிழையில் தப்பிப் பிழைத்தார்.

ஆயினும் குறைந்தது 10 பேர் வரை இத்தாக்குதலில் கொல்லப்பட்டமையுடன் பலர் காயப்பட்டும் போனார்கள்.

இத்தாக்குதல் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சூரியகுமார் கடந்த 06 வருடங்களாக விளக்க மறியல்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.

சாட்சிகள், சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இவரை இந்நீதிமன்றம் சந்தேகத்துக்கு இடம் இன்றி குற்றவாளியாக கண்டு உள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக