அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 24 அக்டோபர், 2012

பிரபாகரனின் புலிப்படை பூனைப்படையாகிய கதைதான் இது (படங்கள் இணைப்பு)

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் போராளிகளில் 350பேர் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளில் 350பேரே இவ்வாறு படையில் இணைக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இவர்கள் கிளிநொச்சியில் விவசாய நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் தலைமையில் ஈடுபட்டனர்.


இனிவரும் நாட்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளையும் சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்படையின் வட பிராந்தியப் பொறுப்பதிகாரி மேஜர் அனில் பண்டார தெரிவித்தார்.

இதுவரை மூவாயிரம் இளைஞர் யுவதிகள் சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் 2200 பெண்களும் 800 ஆண்களும் அடங்குகின்றனர். இவர்கள் அந்தந்த கிராமங்களில் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதுடன் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்களை இனங்கண்டு இராணுவத்திற்கு தகவல் கொடுப்பதே இவர்களின் பணியாகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக