அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 26 அக்டோபர், 2012

கின்னஸ் சாதனை படைத்த மார்பு கச்சை (Bra) ஏலத்தில் (படங்கள் இணைப்பு)

மார்பக புற்றுநோயினால் அவதிப்படுவர்களுக்கு உதவுவதற்கு நிதிசேகரிக்கும் மகத்தான நல்லெண்ண சேவைக்காக உலகில் மிக்பெரிய மார்பக கச்சை ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

ஈபேயில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ள இந்த மாரபு கச்சையானது 7 மீற்றர் நீளமுடையது. அதன் கூம்பு பகுதிகள் 2.5 மீற்றர் ஆழமானது.

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினத்திற்காக கடந்த வருடம் இம் மார்பு கச்சை உருவாக்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய மார்பு கச்சையென கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதியப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வருடம் மார்பக புற்றுநோயினால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் நோக்கில் மேற்படி மார்பு கச்சை ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இந்த மார்புக் கச்சைக்கான ஏலத்தொகை அதிகரிக்கம் என இதனை ஏலத்தில் விடுவதற்கான திட்டத்தை வகுத்த எட்ரின் சிம்ப்ஸன் தெரிவித்துள்ளார்.

மார்பக புற்றுநோய் தினத்தன்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் ஏற்படுத்த உதவும் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு இம் மார்பு கச்சையின் ஏலத் தொகை உதவுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக