அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

தென் தமிழீழத்தின் முதல் பெண் மாவீரரை உருவாக்கிய மண்டையன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பொறுத்த வரை தென் தமிழீழத்தின் முதல் பெண் மாவீரர் லெப்டினன்ட் அனித்தா என்பவர் ஆவார்.

தென் தமிழீழம் என்பது கிழக்கிலங்கையைக் குறிக்கும்.

அனித்தாவின் சொந்தப் பெயர் சித்திராதேவி தம்பிராசா. மட்டக்களப்பில் ஆரையம்பதியைச் சேர்ந்தவர். இவர் புலிகளின் மகளிர் அணியில் செயல்பட்டு வந்தவர்.

அந்நாட்களில்தான் இந்திய அமைதிப் படையின் ஆசியுடன் மண்டையன் குழுவை அமைத்து சுரேஸ் பிறேமச்சந்திரன் செயல்பட்டுக் கொண்டு இருந்தார்.

நீதிக்கு புறம்பான படுகொலைகள், கொள்ளைகள், கப்பம் கோரல்கள், கடத்தல்கள் என்று வன்செயல்களின் மொத்த வடிவமாக மண்டையன் குழு செயல்பட்டது.

குறிப்பாக புலிகள் இயக்க செயல்பாட்டவர்களை சுட்டுக் கொல்வதுதான் இவர்களின் பிரதான செயல்பாடு. இவர்களிடம் அகப்பட்ட பல நூற்றுக்கணக்கான இளையவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

புலிகள் இயக்கத்தின் சக உறுப்பினர் ஒருவரின் சகோதரியுடன் 28/11/1989 ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்தபோது மண்டையன் குழுவிடம் அனித்தா மாட்டுப்பட்டார். இவரை சிறைப் பிடித்துச் சென்றனர்.

மண்டையன் குழுவின் சித்திரவதைகளை அனித்தா மிக நன்றாகவே கேள்விப்பட்டு இருந்தார்.

எனவே பிடித்துச் செல்லப்படுகின்ற வழியில் சயனட் அருந்தி உயிரை மாய்த்துக் கொண்டார் அனித்தா.

காலங்கள் கடந்து போனாலும் வரலாற்று உண்மைகளை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

இன்று தமிழ் மக்களின் மனித உரிமைகள் காவலராக காட்டிக் கொள்கின்ற சுரேஸ் பிறேமச்சந்திரனின் சுயத்தை கடந்த வாரங்களில் உரித்துக் காட்டி உள்ளது கனடாவில் இருந்து வெளிவருகின்ற உலகத் தமிழர் பத்திரிகை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்கிற இவரது கோஷம் வேறும் வேஷம்தான் என்பது இதன் மூலம் வெளிப்பட்டு உள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக