அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

முன்பள்ளி ஆசிரியர்களாக முன்னாள் புலிகள் நியமனம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 400 பேர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆசியுடன், பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் இதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து உள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தரம் வாய்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது. இதை கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்ற அதே நேரம் புனர்வாழ்வு பெற்ற புலிகளுக்கு சிறந்த வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

பாலர்களுக்கு கல்வி கற்பிக்கின்றமையில் இவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்கள் அனைவரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். நிறைவாக நியமன கடிதங்கள் சம்பிரதாயபூர்வமாக அண்மையில் கையளிக்கப்பட்டன.

இவர்களுடன் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவரும் முன்பள்ளி ஆசிரியராக நியமனம் பெற்று உள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக