வலையுலகை கலங்க வைத்திருக்கிறது டோண்டுவின் திடீர் மரணம். கடுமையாகவும் கொடுமையாகவும் அவரை தாக்கியவர்கள் கண்களை குளமாக்கும் வார்த்தைகளால் அஞ்சலி செலுத்துகிறார்கள். யாரவர்? அதென்ன உலகம்? அதை அறிய ஒரு ஜன்னலை திறக்க வேண்டும். எட்ட நின்று பார்ப்பவர்களுக்கு தெரியாது.
தெரிந்தாலும் புரியாது. அப்படி பல உலகங்கள் மாநகர்களில் உண்டு. உதாரணத்துக்கு துறைமுகத்தை சொல்லலாம். அதோடு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு அங்கே நடப்பதெல்லாம் அதிசயமாக தெரியும். அதனிலும் பிரமிப்பை ஏற்படுத்த வல்லது இணையத்தில் சுழலும் வலையுலகம்.
அது பஞ்ச பூதங்களின் ஆளுகைக்கு அப்பாற்பட்ட பொய்யுலகம். அதன் பிரஜைகளை பதிவர் என்கிறார்கள். நங்கநல்லூர் டோண்டு ராகவன் முன்னோடி பதிவர். ‘வாழ்க்கையில் எதை செய்யலாம், செய்ய கூடாது என்பதை அனுபவத்தில் தெரிந்து பகிர வந்தவர்’.(Dondus- dos and donts.) எல்லா விஷயங்களிலும் 9 ஆண்டுகளாக கருத்துமழை பொழிந்தார். ஆணித்தரமாக.
எல்லோராலும் ஜீரணிக்க இயலவில்லை. பின்னூட்டத்திலும் அவரவர் பதிவிலும் டோண்டுவை பிரித்து மேய்ந்தனர். அவர் பெயரிலேயே ஒரு வெளிநாட்டு தமிழன் போலி வலைப்பூ உருவாக்கி நடுங்க வைக்கும் வார்த்தைகளால் விஷம் கக்கியது தமிழ் இணையத்துக்கு புதிய அனுபவம். டோண்டுவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பலரும் வலையுலகுக்கே முழுக்கு போட்டு தலைதெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டது. சட்ட ரீதியாக டோண்டு அதிலிருந்து மீள போராட நேர்ந்தது.
மோசமாக விமர்சனம் செய்தாலும் தனிப்பட்ட முறையில் அவதூறாக எழுதினாலும் விளக்கம் அளிக்கும் பொறுமை டோண்டுவுக்கு பெருமை சேர்த்தது. தான் சொன்னது தவறென ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டு நட்பை வளர்த்துக் கொள்ளும் குணமும் அவரிடம் இருந்தது.
இணையத்தில் அபூர்வமாகிவிட்ட இயல்புகள் இவை. இலங்கை தொடங்கி விஸ்வரூபம் வரை பிரச்னைகளை உணர்வுபூர்வமாக அணுகுவோரின் சுடு சொற்களால் இணையம் நிரம்பி வழிகிறது. புது சிந்தனை, புரட்சிகர கருத்துக்கள், அற்புதமான மொழி நடை, சொல்வளம் கொண்ட இளைஞர்கள் பெண்கள் மிரண்டு ஒதுங்குகிறார்கள். ஆரோக்கியமான விவாதம் ஜனநாயகத்தின் உயிர் மூச்சு. அதை அடக்கும் முயற்சி அனைவருக்கும் துன்பத்தை தரும்.
தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக