அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 6 பிப்ரவரி, 2013

கமல் வெளிநாட்டில் குடியேறுவது நிச்சயம்!

விஸ்வரூபத்துக்கு நடந்தது போல இன்னொரு முறை நடந்தால் நான் தமிழ்நாட்டை விட்டுப் போய்விடுவேன்… ஏன்.. இந்தியாவை விட்டே போய் வெளிநாட்டில் குடியேறுவேன் என்றெல்லாம் எமோஷனலாக மிரட்டிக் கொண்டிருந்தார் அல்லவா கமல்ஹாஸன்?

இதன் நிஜப் பின்னணி இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கமல் ஏற்கெனவே ஒரு ஆங்கிலப் படத்துக்கு கமிட் ஆகியிருக்கிறார் அல்லவா…

இந்தப் படத்தின் வேலைகள் பக்காவாக முடிய குறைந்தது இரண்டரை வருடங்களாவது ஆகுமாம். இந்த விஸ்வரூபத்துக்கே அவர் கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொண்டது நினைவிருக்கலாம்.

ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க நடக்கவிருப்பது அமெரிக்காவில்தான். இதற்காக அவர் அமெரிக்காவிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளதாம்.

இதற்காக அவர் லபாஸ் ஏஞ்சல்ஸிலேயே வீடுகூட பார்த்துவிட்டாராம். போவதுதான் போகிறோம்… இப்படி ஒரு எமோஷனல் குண்டைப் போட்டுவிடலாம் என்பதால்தான் அன்று கமல் அவ்வளவு உருக்கமாக நடித்திருக்கிறார்.

தான் அமெரிக்காவில் செட்டிலானாலும், அந்த இடைவெளியை நிரப்பும் வகையில்தான் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை அவசர அவசரமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் வெளியிடவிருக்கிறார்.

என்னா ப்ளானிங் பாத்தீங்களா…. பை பை கமல்!

சரி செய்திகள்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக