அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 4 பிப்ரவரி, 2013

சோதிடம் பொய்த்தது

மரத்தடியில் சோதிடர் ஒருவர் அமர்ந்திருந்தார் பலர் அவரிடம் ‘எனக்குக் குழந்தை பிறக்குமா? எப்பொழுது என் மகளுக்குத் திருமணம் நடக்கும்? எப்பொழுது கடன் தொல்லை நீங்கும்?’ என்று பல கேள்விகளைக் கேட்டார்கள். எல்லோர்க்கும் சாதகம் பார்த்துப் பலன் சொல்லி வந்தார் அவர்.எப்பொழுதும் அவரைச் சூழ்ந்து கூட்டம் நிற்கும்.

வழக்கம் போல அவர் சோதிடம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சிறுவன் ஒருவன் மூச்சிரைக்க ஓடி வந்தான். ‘சோதிடர் வீடு தீப்பிடித்து எரிகிறது’ என்று அலறினான்.ஐயோ! என் வீடு தீப்பிடித்து விட்டதா?’ என்று அலறியபடியே தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடினார் சோதிடர்.அங்கே அவர் வீட்டில் தீ ஏதும் பிடிக்கவில்லை. எப்பொழுதும் உள்ளது போலவே வீடு இருந்தது.கோபத்துடன் அவர் அந்தச் சிறுவனைப் பிடித்தார். ‘எதற்காக இப்படிப் பொய் சொன்னாய்?’ என்று அதட்டினார்.

எல்லோருக்கும் என்ன நடக்கப் போகிறது என்பதை முன்னரே அறிவிப்பதாகச் சொல்கிறீரே உம் வீடு தீப்பிடித்ததா இல்லையா என்பதை அறிய முடியவில்லையா?’ என்று கேட்டான் அவன்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக