“ இலங்கையின் அரசியல், வெளிநாடுகளின் அநாவசியத் தலையீடு, பயங்கரவாத யுத்தம், ஜே.வி.பியினரின் தேசத் துரோக செயற்பாடுகள் ஆகியவை காரணமாக இருள்மயமாக இருந்த காலகட்டத்திலேயே மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டை பேரழிவில் இருந்து மீட்டெடுக்கும் ஒரு உதய சூரியனாக பிரகாசிக்க ஆரம்பித்தார். அதன் பின்னணியை நாம் விபரமாக இங்கு தருகிறோம்.
1987ஆம் ஆண்டில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் சம்பிரதாயபூர்வமான யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தபோது, இந்த யுத்தத்தை முன்னின்று நடத்திய முக்கிய இராணுவ அதிகாரிகளில் ஒருவராக, இன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ, இலங்கை இராணுவத்தில் மேஜர் பதவியில் இருந்தார்.
அவ்வாண்டு ஜூலை மாதத்தில் வடபகுதியில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த எல்.ரி.ரி.ஈ.யினருக்கு ஆதரவு நல்கும் முகமாக இந்தியா, விமானம் மூலம் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் உணவுப் பொதிகளை போட்டு, இலங்கையின் இறைமையை அவமதிக்கக்கூடிய முறையில் நடந்து கொண்ட தையடுத்து, இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் முரண்பாடு கள் தோன்ற ஆரம்பி த்தன.
அன்றைய காலகட்டத்தில், எல்.ரி.ரி.ஈ. இயக்கம், ஏனைய தமிழ் ஆயுதப்போராளி இயக்கங்களை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்து, ஒழித்துக்கட்டிய வண்ணமிருந்தது. அப்போது தன்னுடைய இளம் வயது தோழனான ரெலோ இயக்கத்தின் தலைவர், ஸ்ரீ சபாரட்ணத்தை பிரபாகரனின் உத்தரவுக்கு அமைய எல்.ரி.ரி.ஈ.யின் யாழ்ப்பாண தளபதி கிட்டு விரட்டிச் சென்று, உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு கோயிலில் சிலைக்கு பின்னால் மறைந்திருந்தபோது, அருகில் சென்று சுட்டுக் கொன்றிருக்கிறார்.
(மஹிந்த ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார். உலகிலுள்ள ஏழு கோடி தமிழர்களின் சார்பில் தமிழில் உரையாற்றிய முதல் தலைவர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்)
அத்தகைய கொடுமை புரிந்த, கிட்டு எல்.ரி.ரி.ஈ. ஆயுதங்களை தான் ஏற்றி வந்த கப்பலை இந்திய கடற்படையினர் முற்றுகையிட்ட போது, அந்த கப்பலையே குண்டு வைத்து தகர்த்து தனது சகாக்களுடன் மரணமடைந்தார்.
தங்கள் இயக்கம் மட்டுமே தமிழர்களின் விடுதலை போராட்டத்தை முன்னின்று நடத்த வேண்டும் என்ற சுயநல நோக்கத்துடன் அன்று, எல்.ரி.ரி.ஈ. இயக்கம் இவ்விதம் மற்ற தமிழ் போராளி குழுக்களை துவம்சம் செய்து வந்தது.
இதற்கு தென்னிந்தியா எல்.ரி.ரி.ஈ.க்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைந்திருந்தது. இந்த யுத்த நிலைமை காரணமாக, இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகள் தென்னிந்தியாவுக்கு படகுகள் மூலம் சென்று அடைக்கலம் கோரினார்கள்.
இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த ராஜீவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவை, தனிப்பட்ட முறையில் அங்கிள் என்று அழைத்து, அதிக மதிப்பை வைத்திருந்த போதிலும், அவர் அதே மனிதரை (ஜே.ஆர்.ஜயவர்தன) இலங்கை ஜனாதிபதி என்ற முறையில் கெளரவமாக நடத்தினார் என்று கூறுவதற்கில்லை.
ஒரு நாள் இரவு 10 மணியளவில் ராஜீவ்காந்தி, தனது இலங்கையில் உள்ள தங்கள் நாட்டுத் தூதுவர் ஜே.என்.டிக்ஷிட் அவர்களை நித்திரையில் இருந்து எழுப்பி, நீங்கள் உடனடியாக இலங்கை ஜனாதிபதியின், வோட்பிளேஸ் இல்லத்திற்குச் சென்று, நாளை காலை நான் கொழும்புக்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்வேன் என்றும், அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்ளு ம் படியும் உத்தரவு பிறப்பித்தார்.
டிக்ஷிட் அன்றிரவு, ஜே.ஆர்.ஜயவர்தனவைச் சந்தித்து, அந்தத் தகவலை வெளியிட்டபோது, அவர் சற்று அதிர்ச்சியடைந்து, சரி நீங்கள் போங்கள் நான் ஏற்பாடுகளைச் செய்கின்றேன் என்று பதிலளித்திருக்கிறார்.
மறுநாள் காலை ராஜீவ் காந்தி தன்னுடைய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவ் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கொழும்புக்கு வந்தார். அப்போது நாட்டில் சிங்கள இளைஞர்களின் எதிர்ப்பு காரணமாக, நாட்டில் பாதுகாப்பு சீர்குலைந்து இருந்த காரணத்தினால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கிய ராஜீவ்காந்தி, அங்கிருந்து ஹெலிகொப்டர் மூலம் கொழும்பு நகரை வந்தடைந்தார்.
1970 இல் 24 வயது இளைஞர் மஹிந்த பாராளுமன்றத்திற்கு தெரிவானார்
ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு சிந்திப்பதற்கு அதிக அவகாசம் கொடுக்காமல், அவர் மீது அழுத்தங்களைக் கொண்டுவந்து, ராஜீவ்காந்தி பலவந்தப்படுத்தி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் இலங்கை ஜனாதிபதியை கைச்சாத்திட வைத்தார். ஜே.ஆர்.ஜயவர்தன பலம் வாய்ந்த இந்திய அரசாங்கத்தை பகைத்துக்கொண்டால் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்ற அச்சத்தில், தமது எதிர்ப்பை வெளியிடாமல், இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக அறிவிக்கப்படுகிறது.
அப்போது நீதியமைச்சராக இருந்த கல்குடாத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.டபிள்யு.தேவநாயகம், வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீட், ஜனாதிபதியின் செயலாளர் மணிக்திவல ஆகியோர் ஜனாதிபதி ஜயவர்தனவுடன் இருந்தார்கள்.
மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திசாநாயக்க, இந்திய அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக அன்று இருந்து வந்ததனால், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அவரால் எதிர்க்க முடியவில்லை.
ஆயினும் வர்த்தக மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த லலித் அத்துலத் முதலியும், பிரதம மந்திரி ஆர்.பிரேமதாஸவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை பகிரங்கமாக எதிர்த்து, ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் அதனைப் பகிஷ்கரித்தனர்.
ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் கொழும்புக் கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் மாளிகைக்கு முன்னால், அன்று காலை 10 மணியளவில் இலங்கை கடற்படையினர் இந்தியப் பிரதம மந்திரி ராஜீவ்காந்திக்கு மரியாதை அணிவகுப்பொன்றை நிகழ்த்துவதற்கான ஒழுங்குகளைச் செய்தனர்.
மரியாதை அணிவகுப்பை ஏற்று, அணிவகுப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, ராஜீவ்காந்தியை ஒரு கடற்படை வீரர் தனது துப்பாக்கியின் பின் பக்கத்தினால் தலையில் தாக்க முயற்சித்தார். ஆயினும் தெய்வாதீனமாக ராஜீவ்காந்தி காயமடையவில்லை.
இந்த சம்பவத்தினால் ராஜீவ்காந்திக்கு உயிராபத்து ஏற்பட்டிருந்தால், இதனால் பாரதூரமான விளைவுகள் இருநாடுகளின் உறவில் ஏற்பட்டிருக்கும். ஆயினும், இலங்கை அன்னை எமது நாட்டை இந்த ஒரு மனிதனின் தவறான செயலினால் பெரும் ஆபத்தை எதிர்நோக்காத வகையில் காப்பாற்றிவிட்டார்.
ராஜீவ்காந்தியை தாக்க முற்பட்ட அந்தக் கடற்படை வீரர் தென்னிலங்கையைச் சேர்ந்தவர். அவர் கைதுசெய்யப்பட்டு, இராணுவ விசாரணையின் பின்னர் சிறைத்தண்டனை பெற்றார்.
காலையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அன்று மாலையிலேயே இந்திய விமானப்படையின் பொருட்களை ஏற்றிவரும் பாரிய நான்கு ஹேர்கியூலிஸ் விமானங்களில் ஆயிரக்கணக்கில் இந்திய இராணுவ வீரர்களையும், யுத்த தாங்கிகள், ஹெலிக்கொப்டர்கள் போன்ற அனைத்துத் தளபாடங்களையும் கொண்டுவந்து பலாலி விமான நிலையத்தில் இந்திய அரசாங்கம் இறக்கியது.
24 மணி நேரத்தில் 75,000 இந்திய இராணுவத்தினர் இலங்கையில் இறக்கப்பட்டனர். இவர்களை இந்திய இராணுவத்தினர் என்று அழைப்பதற்குப் பதிலாக இந்திய அமைதிகாக்கும் படையினர் என்று, அதாவது, ஆங்கிலத்தில் ஐ.பி.கே.எப். என்று அழைத்தனர். இதனை அவதானித்த வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், இந்தியா இரத்தம் சிந்தாமல் இலங்கையை ஆக்கிரமித்துவிட்டது என்று விசனப்பட்டார்கள்.
ஓரிரு நாட்களில் இந்திய அமைதி காக்கும் படையினர், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் முகாம் இட்டு, வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு ஆக்கிரமிப்பு படையைப் போன்று தங்கள் அதிகாரத்தை வியாபித்துக் கொண்டிருந்தார்கள்.
இலங்கை இராணுவத்தின் மீது ஆத்திரம் கொண்டிருந்த வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் தங்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க வந்திருக்கும் இரட்சகர்கள் என்று இந்திய இராணுவத்தினரை மாலை அணிவித்து, மேள, வாத்திய இசையுடன் அன்று மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஆனால், தமிழ் மக்களின் இந்த மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை. தமிழர்களின் இரட்சகர்களாக வந்து சேர்ந்த இந்திய இராணுவத்தினர் தமிழ் மக்களுக்கு தீங்கிழைக்கக் கூடிய இராட்சகர்களாக ஓரிரு மாதங்களில் மாறிவிட்டார்கள்.
இதனால், பூவும், பொட்டும் குங்குமத்துடன் மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த நூற்றுக் கணக்கான தமிழ் பெண்கள், தங்கள் பூவையும், பொட்டையும் இழந்து விதவைக் கோலம் பூண்டார்கள். விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட கணவன்மார் எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் என்ற சந்தேகம் எழும்போது, எவ்வித விசாரணையுமின்றி அவர்கள் இந்திய இராணுவத்தினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்......”

மஹிந்தவின் தாயாரின் இறுதிக்கிரியைகளின் போது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக