அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 20 மார்ச், 2013

விண்டோஸ் 8 சிஸ்டம் Start

விண்டோஸ் 8 முதலில் வேகமாக பூட் ஆகி வந்த சிஸ்டம், இப்போது தொடங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதனைச் சரி செய்திட எளிய வழி, டாஸ்க் மானேஜரை திறந்து, ஸ்டார்ட் அப் டேப்பினைக் கிளிக் செய்து, அதில் உள்ள புரோகிராம்களைக் காண்பதுதான்.

டாஸ்க் மேனேஜர் திறக்க, விண்டோஸ் கீயினை அழுத்தியவாறே, எக்ஸ் கீயையும் சேர்த்து அழுத்த வேண்டியதுதான்.

பின்னர், கிடைக்கும் விண்டோவில், ஸ்டார்ட் அப் டேப்பினைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட வேண்டும்.

அதில் காட்டப்படும் புரோகிராம்களில், உங்களுக்குத் தேவை இல்லாததின் மேல், ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் கீழ்விரி மெனுவில், disable என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

இவ்வாறு, தேவையற்ற புரோகிராம்கள், விண்டோஸ் இயங்கத் தொடங்குகையில், இயங்குவதைத் தடை செய்தால், உங்கள் கம்ப்யூட்டர் விரைவாக இயங்க தயாராக நிற்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக