அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 மார்ச், 2013

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ஸ்டார்ட் மெனு தேவை

ஸ்டார்ட் மெனு போனது போனதுதான். இனி மேல் அதனைத் திரும்ப தரும் எண்ணமெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இல்லை. உங்களுக்கு அது கட்டாயம் தேவை என்ற ஆசை இருந்தால், தர்ட் பார்ட்டி தரும் ஸ்டார்ட் மெனு பயன்பாட்டு புரோகிராம்களைப் பயன்படுத்துங்கள்.

இந்த வகையில் ஆறு அல்லது ஏழு புரோகிராம்கள் குறித்து படித்துள்ளேன். டவுண்லோட் செய்து பயன்படுத்தியும் பார்த்துள்ளேன். அவற்றில் இரண்டு புரோகிராம்கள் மிக நன்றாக, எந்தவித இடையூறும் இன்றிஇயங்குகின்றன.

ஒன்றின் பெயர் classicshell. இது கிடைக்கும் இணையதள முகவரி http://classicshell.sourceforge.net. இது முற்றிலும் இலவசம்.

இன்னொன்று start8 என்பதாகும். கிடைக்கும் தள முகவரி: http://www.stardock.com/products/start8/download.asp.

இது பழகிப் பார்க்க, சோதனை செய்திட சில நாட்களுக்கு மட்டும் இலவசமாகக் கிடைக்கும். காலம் முடிந்தவுடன் கட்டணம் 4.99 டாலர் செலுத்த வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக