அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 18 மார்ச், 2013

எக்ஸெல் டிப்ஸ்

பெயர் சரியாக அமைக்க:

எக்ஸெல் தொகுப்பில் செல்களில் பெயர் களை அமைக்கும் போது, முதல் எழுத்தைச் சரியாகப் பெரிய எழுத்திலும், மற்றவற்றை சிறிய எழுத்திலும் ஆங்கிலத்தில் அமைக்க ஒரு கட்டளைச் சொல் உள்ளது. இது PROPER என்ற பங்சன் கட்டளைச் சொல் ஆகும். இதனைப் புரிந்து கொள்ள கீழே தந்துள்ளபடி செயல்படவும். செல் (K1) ஒன்றில் rajini என டைப் செய்திடவும். இனி இன்னொரு செல் செல்லுங்கள். அதில் =PROPER (k1) என பார்முலா கொடுங்கள். உடனே அங்கு டைப் செய்த பெயர், Rajini சரியான முறையில் என அமைக்கப்படும்.

எக்ஸெல் பிழைகள் சோதனை:

எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றுகையில், டேட்டாவினை செல்களில் நிரப்புகையில், அதன் பின்புலத்தில், எக்ஸெல், செல்களில் இடப்படும் டேட்டாவில் ஏதேனும் பிழைகள் இருக்கின்றனவா என்று சோதனை இடும். பிழைகள் இருந்தாலும், அல்லது எக்ஸெல் பிழை என முடிவு செய்தாலும், செல்லின் இடது ஓரத்தில் மேலாக, பச்சை நிறத்தில் ஒரு சிறிய முக்கோணம் ஒன்றினை ஏற்படுத்தும். இந்த முக்கோணங்கள் எனக்குக் காட்டப்படத் தேவையில்லை; என்னால் பிழைகள் இல்லாமல் டேட்டாவினை அமைக்க முடியும். அப்படியே பிழைகள் இருந்தால், நானாக அவற்றைக் கண்டறிந்து திருத்திக் கொள்ள முடியும்; எனக்கு இந்த முக்கோணங்கள் எல்லாம் வேண்டாம் என நீங்கள் எண்ணினால், அப்படியே செட் செய்துவிடலாம்.
கீழ்க் குறிப்பிட்டவாறு செயல்படவும். (இந்த டிப்ஸ் எக்ஸெல் 2002, 2003, மற்றும் 2007 ஆகிய தொகுப்புகளுக்குப் பயன்படும்.)

1. எக்ஸெல் Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் Options டயலாக் பாக்ஸினைத் தரும்.

2. இந்த விண்டோவில் Error Checking என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

3. இதில் Enable Background Error Checking என்ற பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பின், அதனை நீக்கவும்.

4.பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இதுவரை காட்டப்பட்டு வந்த பச்சை நிறத்திலான, முக்கோணங்கள் எல்லாம் மறைந்து, இனி புதிதாக எதுவும் தோன்றாது.

எக்ஸெல் ஷார்ட் கட் கீகள்:

காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.

Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.

ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+ Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+ Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப் பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.

என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக