அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 18 மார்ச், 2013

வேர்ட் டிப்ஸ்

மனதிற்குப் பிடித்த அடிக்கோடுகள்: வேர்ட் டாகுமெண்ட்டில், சில சொற்களை மற்ற சொற்களிலிருந்து பிரித்துக் காட்ட, எழுத்துக்களை தடிமனாக, சாய்வாக மற்றும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம். இவற்றை முறையே CTRL +B, CTRL +I மற்றும் CTRL +U கீகளை அழுத்தி அமைக்கிறோம். இதில் கோடு எப்போதும் ஒரு அளவில் அமைக்கப்படுகிறது. பல வேளைகளில், இந்தக் கோடு அமைவது நமக்குச் சலிப்பினைத் தருகிறது. ஏனென்றால், நம்மில் பலருக்கு, இன்னும் பலவகையான கோடுகளை அமைக்க வேர்ட் வசதிகளைத் தருகிறது என்பதனை அறியாமல் இருக்கிறோம். புள்ளிகள், டேஷ் கோடுகள், இரட்டை கோடுகள், அலை அலையாய் கோடுகள் ஆகியவற்றைக் கொண்டும் அடிக் கோடிடலாம். எப்படி அவற்றை அமைப்பது எனப் பார்க்கலாம்.

1. எந்த சொற்களுக்கு அடிக்கோடிட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

2. அடுத்து “Font” dialog box திறக்கவும். “Home” டேப்பினை ரிப்பனில் தேர்ந்தெடுத்து இதனை மேற்கொள்ளலாம். பின்னர், வலது கீழாக உள்ள அம்புக்குறியினைக் கிளிக் செய்திடவும். அல்லது CTRL + SHIFT + F ஆகிய கீகளை ஒருசேர அழுத்தவும்.

3. இப்போது “Font” டயலாக பாக்ஸ் கிடைக்கும். உங்கள் விருப்பப்படி, “Underline style” என்பதனை அடுத்துள்ள டெக்ஸ்ட் பாக்ஸை விரிக்கவும். இங்கு நீங்கள் விரும்பும் வகையிலான அடிக்கோடு அமைக்க பல ஆப்ஷன்கள் கிடைக்கும்.

அவற்றிலிருந்து தேவையானதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதே போல “Underline color” என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதற்கான வண்ணத்தையும் அமைக்கலாம். இதில் காட்டப்படும் வண்ணம் எதுவும் உங்களுக்கு மன நிறைவைத் தரவில்லை என்றால், “More Colors” என்பதில் கிளிக் செய்து மேலும் பல வண்ணங்களைப் பெற்று, தேர்ந்தெடுக்கலாம்.

4. பின்னர் ஓகே கிளிக் செய்து, டயலாக் பாக்ஸை மூடி வெளியேறலாம். இனி, நீங்கள் செட் செய்தபடி, அடிக்கோடுகள் கிடைக்கும்.

டேபிளில் செல் இடைவெளி: வேர்டில் டேபிள் ஒன்றை அமைத்து, தகவல்களை அமைக்கும் வசதியில் சில அழகு சேர்க்கும் வேலைகளை மேற்கொள்ளலாம். இந்த வகையில் செல்களுக்கிடையே சிறிய இடைவெளியை உருவாக்குவது எப்படி எனப் பார்க்கலாம். இந்த இடைவெளி,
செல்களையும், அவற்றின் வரிசைகளையும் அழகாக எடுத்துக்காட்டும்.

இதற்கு டேபிள் எடிட்டர் ஒன்றை வேர்ட் கொண்டுள்ளது. பொதுவாக டேபிள் ஒன்றை உருவாக்குகையில், செல்களுக்கிடையே இடைவெளி எதுவும் ஏற்படுத்தப்பட மாட்டாது. செல்களைப் பிரிக்கும் கட்ட கோடு மட்டுமே காட்டப்படும். இதனையும் வேண்டாம் என்றால், மறைத்துவிடலாம். எனவே செல்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்த நாம் அதனுடன் வரும் டேபிள் எடிட்டரைப் பயன்படுத்த வேண்டும்.

1. முதலில் வடிவத்தினை மாற்ற எண்ணும் டேபிளில் எங்கேனும் ரைட் கிளிக் செய்திடவும். வேர்ட் Context மெனுவினைக் காட்டும்.

2.இந்த மெனுவில் Table Properties என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் உடனே, Table Properties டயலாக் பாக்ஸைக் காட்டும்.

3. இதில் Table டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.

4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Options என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Table Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.

5. இதில் Allow Spacing Between Cells என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

6. இந்த செக் பாக்ஸின் வலது பக்கம், செல்களுக்கிடையே எவ்வளவு இடம் விடப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக் கவும்.

7. அடுத்து Table Options டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடவும்.

8. பின்னர், Table Properties டயலாக் பாக்ஸை மூடுவதற்கான ஓகே பட்டனைக் கிளிக் செய்திடவும்.

வேர்ட் டேபிள்களில் செல் தலைப்புகள்: வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். அதனை பிரிண்ட் எடுக்க முயற்சிக்கையில் அது பல பக்கங்களில் அமைந்திருப்பதனையும் அடுத்த அடுத்த பக்கங்களில் டேபிளில் உள்ள வரிசைகளுக் கான தலைப்புகள் இல்லை என்பதனையும் உணர்கிறீர்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஹெடர்கள் வந்தால் தானே ஒவ்வொரு காலமும் எது குறித்த தகவல்களைக் கொண்டுள்ளன என்று எளிதாகத் தெரியும்.

உடனே முதல் பக்கத்தில் இருக்கும் டேபிள் தலைப்பு உள்ள படுக்கை வரிசையினை அப்படியே காப்பி செய்து ஒவ்வொரு பக்கத்தின் முதல் வரிசையிலும் புதிய வரிசை யினை ஏற்படுத்தி பேஸ்ட் செய்திடலாம். ஆனால் இது இன்னும் பிரச்னையை ஏற்படுத்தும். பின்னாளில் ஏதேனும் ஒரு வரிசையை இணைத்தாலோ அல்லது நீக்கினாலோ இரண்டாம் பக்கத்திலிருந்து உள்ள தலைப்பு அடுத்த பக்கத்திற்கோ அல்லது முந்தைய பக்கத்திற்கோ செல்லும். இந்த குழப்பத்தினைச் சரி செய்திட ஒரு வழியினை வேர்ட் தருகிறது. இதற்கான தீர்வினை Headings என்ற பகுதியில் பெறலாம். முதலில் முதல் பக்கத்தில் டேபிள் தலைப்பு அமைத்த வரிசையினை செலக்ட் செய்திடவும். பின் Table மெனு செல்லவும்.

விரியும் மெனுவில் கிடைக்கும் பிரிவுகளில் Heading Rows Repeat choice என்ற பிரிவினைக் கிளிக் செய்திடவும். பழைய வேர்ட் தொகுப்பாக இருந்தால் Headings என்று மட்டுமே இருக்கும். இனி பார்த்தால் ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பில் இந்த ஹெடர்கள் இருக்கும். நீங்கள் எத்தனை வரிசையினை சேர்த்தாலும் நீக்கினாலும் இது அப்படியே தான் இருக்கும். இந்த ஹெடர்களில் மாற்றம் செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டால் முதல் பக்கத்தில் உள்ள தலைப்பு வரிசையில் மட்டுமே மாற்ற முடியும். இரண்டாவது பக்கத்திலோ அல்லது வேறு பக்கத்திலோ உள்ள ஹெடரில் மாற்ற முடியாது. மேலும் முதல் பக்கத்தில் என்ன மாறுதல் செய்கிறோமோ அது மற்ற பக்கத்திலும் அப்படியே மாற்றப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக