அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 23 மார்ச், 2013

அமெரிக தீர்மானம் மூலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது: மகிந்த ராஜபக்சே

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையை ஒன்றும் செய்துவிட முடியாது என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜபக்சே, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம், எங்கள் மீதான தாக்குலாகும். இத்தாக்குதலால் நாங்கள் ஆச்சரியமோ அதிர்ச்சியோ அடையவில்லை. இது போன்ற தாக்குதல்களால் எங்களை அடக்கவோ, தோற்கடிக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது.

விடுதலைப்புலிகளின் பிரிவினைவாதப் போரை ஒடுக்கிய ராணுவத்துக்கு தலைமை தாங்கி நான் வழி நடத்தினேன். அப்போது, வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலி ஆதரவாளர்களிடம் இருந்தும், இலங்கைக்கு எதிரான சக்திகளிடம் இருந்தும் இது போன்ற தாக்குதல்களை எதிர்பார்த்தேன்.

எனது அரசு மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் தவறான குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி உள்நோக்கமும் கொண்டவையாகும். நார்வே ஆதரவிலான போர் நிறுத்தம் 2008இல் முடிவுக்கு வந்தது. 2009ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த நாட்டின் ஒரு பகுதி ஈழப்பகுதி என்று அடையாளம் காணப்பட்டது. அதற்கு போர் நிறுத்த ஒப்பந்தமானது சிறிது அங்கீகாரமும் அளித்தது. ஆனால் சர்வதேச சமூகத்தினரால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்தத்தை நாம் ரத்து செய்திருக்காவிட்டால், இன்றுள்ள நிலைமை எப்படி உருவாகியிருக்கும்? என்றார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக