அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 23 மார்ச், 2013

'அதுக்கு இவர் லாயக்கில்லை!' - பிரபல பாடகர் மீது பாடகி புகார்... விவாகரத்து கேட்டு வழக்கு!!

திருமண வாழ்க்கைக்கு உடல் மற்றும் மன ரீதியாக லாயக்கில்லாதவராக இருக்கிறார் என்று கூறி பிரபல பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன் மீது குற்றம் சாட்டி விவாகரத்து கோரியுள்ளார் அவரது மனைவியும் பிரபல பாடகியுமான ரம்யா.

தமிழில் வட்டாரம் உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடியவர் ராஜேஷ் கிருஷ்ணன். கன்னடத்தில் இவர் முன்னணி பாடகர். மூவாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, நந்தி விருது கூட பெற்றுள்ளார். ஏற்கெனவே இருமுறை திருமணமாகி விவாகரத்தானவர்.

இவர் மூன்றாவதாக மணந்தவர்தான் பிரபல பாடகி ரம்யா. கடந்த 2011 நவம்பரில் கொல்லூர் முகாம்பிகை கோவிலில் திருமணம் நடந்தது. இவர்கள் திருமண வாழ்க்கையும் ஒரு வருடத்தில் முறிந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்தனர்.

இந்த நிலையில் ரம்யா கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜேஷ் கிருஷ்ணன் திருமண வாழ்க்கைக்கு பொருத்தமில்லாதவர். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் பலவீனமாக இருக்கிறார் என்று ரம்யா குற்றம் சாட்டி உள்ளார்.

ஜீவி பிரகாஷ் குழுவில் முக்கிய பாடகியாக உள்ளவர் இந்த ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக