அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 15 ஏப்ரல், 2013

“நடிகை அஞ்சலி மேட்டரில் இலங்கை தமிழர் அரசியல்!” சூப்பர் ‘ஊர் சுற்றும் புராணம்’!!

நடிகை அஞ்சலி விவகாரம் சாதாரண குடும்ப தகராறு மட்டும் அல்ல, அதில் ‘அரசியல் சதி’ இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள டைரக்டர் களஞ்சியம், “வரும் 24-ம் தேதி நடக்கும் படப்பிடிப்பில் அஞ்சலி பங்கேற்காவிட்டால் நடிகர் சங்கத்தி்ல் புகார் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெறும் தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த இயக்குனர் களஞ்சியம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது, அவர் கூறுகையில், “நடிகை அஞ்சலி பிரச்னையை பொறுத்தமட்டில் குடும்ப பிரச்னை காரணமாக அவர் வீட்டை விட்டு ஓடிச்சென்று தனது சித்தி, சித்தப்பா மீது புகார் தெரிவித்துள்ளார். என் மீது அவர் சுமத்தியுள்ள புகார் வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.

நான் அஞ்சலியை கொடுமை செய்ததாகவும், சொத்தை அபகரிக்க முயல்வதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் 3 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது சந்தேகமாக உள்ளது. இதுதொடர்பாக நான் போலீசில் புகார் செய்துள்ளேன்.

அஞ்சலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்து உள்ளேன். நீதிமன்றத்திலும் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்.

இலங்கை தமிழர் பிரச்னைக்காக என்னுடைய தமிழர் நலம் பேரியக்க அமைப்பு பாடுபட்டு வருகிறது. அந்த அமைப்பின் மாநில தலைவராக நான் உள்ளேன். இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க. மீதும், காங்கிரஸ் அரசு மீதும் நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். அடுத்த பக்கம் வாருங்கள்

இலங்கை தமிழர் பிரச்னையில் எமது இயக்கம் தீவிரவாம ஈடுபட்டுள்ளதால், அஞ்சலி விவகாரத்தில் அரசியல் சதி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

அஞ்சலி அபாண்டமாக என் மீது பழி சுமத்தி விட்டார், சேற்றை என் மீது மட்டுமின்றி, எனது தமிழர் நலம் பேரியக்க அமைப்பினர் மீதும் வீசி உள்ளார்.

தற்போது ‘ஊர் சுற்றும் புராணம்’ படத்தில் நான் கதாநாயகனாகவும், அஞ்சலி கதாநாயகியாகவும் நடித்து வருகிறோம். இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. சம்பவத்துக்கு முந்தைய நாளில்கூட என்னுடன் அஞ்சலி பணி செய்துள்ளார்.

இந்த படத்துக்கான அடுத்த கால்ஷீட்டை அஞ்சலி வருகிற 24-ம் தேதி கொடுத்துள்ளார். அன்றைய தினம் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கத்தில் அவர் மீது புகார் செய்வேன்.

பிரச்னைக்கு பிறகு அஞ்சலி என்னுடன் பேசவில்லை. 24ஆம் தேதி படப்பிடிப்புக்கு அவர் வந்தால் வழக்கம்போல் நான் அவருடன் நடிப்பேன்” என்றார்.

ஓகோ, இதற்குள் அரசியல் சதியும் இருக்கிறதா? அதுவும், நடிகை அஞ்சலியை வைத்து, இலங்கைத் தமிழர் பிரச்னையில்…. தி.மு.க.வா, காங்கிரஸா… அல்லது ஒருவேளை ராஜபக்ஷே கனெக்ஷனும் உண்டோ..

‘ஊர் சுற்றும் புராணம்’ எப்பங்க ரிலீஸ்? கண்டிப்பா பார்க்கணும்.. ஏன்னா, அந்தப் படம் கற்பனை வளம் மிக்க கதையாக இருக்க சான்ஸ் அதிகம்!

viruvirupu
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக