அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 13 மே, 2013

நாய்களுக்கென்றே உருவாகப் பட்ட நவீன கம்யூட்டர் !

முன்னர் நாய்களுக்கென அமெரிக்காவிலும் அதைத் தொடர்ந்து இஸ்ரேலிலும் தொலைக்காட்சி சானல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது..இதில் நாய்களால் உணரக்கூடிய இசையும் , அவர்களால் அறியப் படும் கலர்களும் காண்பிக்கப் படுகின்றன.ஆறு நிமிடங்களுக்கு ஒரு முறை நிகழ்ச்சி மாற்றப் படுகிறது..இதனால் நாய்களின் தனிமையைப் போக்கி சொகுசாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருகின்றனவாம்..

இப்ப பார்தீங்கன்னா லண்டன்ல விஞ்ஞானிகள் நாய்களுக்கென்று தனிக் கம்பியூட்டர் ஒன்றை தயாரித்திருக்கிறார்கள். அவை விளையாட,டிவி ,ஃப்ரிட்ஜ் அவன் போன்ற வீட்டு சாதனங்களைக் கையாள வீட்டு எஜமானர்களுடன் உரையாட இப்படி அந்த கம்பியூட்டர் டிசைன் செய்யப் பட்டிருக்கிறதாம்.

இந்த ஆராய்ச்சிக்கு முக்கியக் காரணம் தனித்து வாழும் முதியோர்களும், வீல் சேரில் வாதம் வந்த முடங்கிக் கிடப்பவர்களும்,மனித உதவி இல்லாதவர்களும் நாய்களின் உதவியுடன் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வேலைகளை எளிதாக்கிக் கொள்ள என்பதேயாகும்.

குறிப்பாக ஸ்விட்ச் போட்டு லைட் போடுவது, வாஷிங் மெஷின் ஆன் செய்வது, ஃபோன் வந்தால் எடுப்பது இப்படிப் பட்ட வேலைகளுக்கு நாய்களைப் பழக்க படுத்துவதற்காக கம்பியூட்டர் மூலம் உரையாட நாய்களுக்கு பயிற்சி தரவென்றே வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

மேலும் தனக்கு ஏதேனும் ஆபத்து நேரும் போது தன் நாய்க்கு ஒரு மெஸ்ஸேஜ் அனுப்பி உதவிக்கு வர வைப்பது இப்படி நாயை ஒரு தாய் போல் வேலை வாங்க இந்த கம்பியூட்டர் உதவியாக இருக்குமாம்… நாம் உபயோகிக்கும் கீ போர்ட் போல் அல்லாமல் நாய்கள் புரிந்து கொண்டு கையாளும் வண்ணம் பெரிய பட்டன்கள்,டச் ஸ்க்ரீன் டெக்னாலஜி என்று பிரதியேகமாக வடிவமைத்து இருக்கிறார்கள்.

ம்ம் இப்படியே வளர்ந்து வரும் டெக்னாலஜியைப் பார்க்கும் போது இந்த நாய்களும் ஃபேஸ்ப் புக் அக்கவுண்ட் ஆரம்பித்து நமக்கு ஃப்ரென்ட் ரிக்வெஸ்ட் அனுப்பற காலம் கூட தொலைவில் இல்லை என்றேத் தோன்றுகிறது..

அது மட்டுமின்றி நாயும்,யானையும் ,குரங்கும் செய்யும் சாகசங்களையும்,மனிதர்கள் போல சென்டிமென்ட் விட்டு நடிப்பதையும் அந்தக் கால தேவர் பிலிம்ஸ் படங்கள் முதல் இந்தக் கால ராம நாராயணன் படங்கள் வரைப் பார்த்திருப்போம். நிஜ வாழ்விலும் மிருகங்கள் இத்தகையக் கதாப் பாத்திரங்களாக மாறும் காலம் வந்து கொண்டே இருக்கிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக