அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 12 மே, 2013

டி.எம்.செளந்தரராஜன் ஆஸ்பத்திரியில் அனுமதி

பழம்பெரும் சினிமா பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் மந்தைவெளியில் அவரது வீட்டில் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்ற டி.எம்.சவுந்தரராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினார். நேற்று திடீரென்று சுவாச கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவர் மீண்டும் மயிலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். டி.எம்.சவுந்தரராஜனின் மகன்கள் பால்ராஜ், செல்வகுமார் ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகிறார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக