அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 13 ஜூன், 2013

ஃபாஸ்ட்புட் போயாச்சு- பறக்கும் உண்வகம் வந்தாச்சு! வீடியோ!!

நாள்தோறும் மாறிவரும் டெக்னாலஜி வளர்ச்சி மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக அது மனிதர்களின் வாழ்க்கை முறைகளையும், பணிகளையும் மிகவும் எளிதாக்கி வருகிறது. இதற்கு உதாரணமாக லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பறந்து பறந்து உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பிதிய இயந்திரத்தைக் குறிப்பிடலாம். லண்டனில் உள்ள யோ!சுசி)என்ற ஹோட்டலில்தான் ஹெலிகாப்டர் போன்ற சாதனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவினைப் பரிமாறும் நவீன டெக்னாலஜியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு ஐ டிரே எனப் பெயரிட்டுள்ளது. இது குறித்த சம்பந்தப்பட்ட உணவகம். ”இந்த ஐ டிரேயானது மணிக்கு 25 மைல் வேகத்தில் பறந்து செல்லக் கூடியது. இது வெயிட் குறைந்த காபன் பைபர் பிரேம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் ஊழியர்கள் இதன் மூலம் மேசைக்கு உணவினை அனுப்புகின்றனர். அவர்கள் உணவைப் பெற்றதும் ஐ டிரே அவ்விடத்திலிருந்து திரும்பி விடுகின்றது. இதனை அங்குள்ள ஊழியர்கள் ஐ- பேட்டின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.”என்றனர்.

தற்போது இந்த லேட்டஸ்ட் டெக்னாலஜியானது இவர்களின் இரண்டு கிளைகளில் மட்டுமே இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் ஐ டிரே-யை இவர்களின் மற்ற 64 கிளைகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கிடையில் இதே ஹோட்டலில் இதற்கு முன்னரும் பல டெக்னாலஜி அறிமுகங்களை செய்துள்ளது.அதாவது உணவினை தானாக சென்று வழங்கக் கூடிய ‘கன்வேயர் பெல்ட்’ மற்றும் பேசும் ரோபோ ட்ராலிஸ்’ போன்றவை நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது நினைவுகூறத்தக்கது.இதன் மூலம் ஹோட்டல் ஊழியர்களின் நேரம் மீச்சமாவதுடன், வாடிக்கையாளர்களைக் கவர்ந்து துரிதமாக உணவும் பரிமாறப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


ஆந்தையார் ரிப்போர்ட்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக