அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 13 ஜூன், 2013

பிரிட்டனில் பெண்ணுறுப்பு முன் தோல் நீக்க வழக்கம் நீடிக்கிறது

பிரிட்டனில் சில சமூகத்தவர் இடையே பெண்ணுறுப்பு முன் தோல் நீக்கம் இன்றளவும் செய்யப்பட்டுவருவதைத் தடுக்க அரசாங்கம் தவறிவருவதாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறுகின்றனர்.

குறிப்பிட்ட சமூகத்தவரின் மத இன உணர்வை புண்படுத்தும் செயலாக ஆகிவிடுமோ என்று தயங்கியே இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொலிசாரும் சமூக சேவைப் பிரிவுகளும் தடுமாறுகிறார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பிரிட்டனில் வாழும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே இந்த வழக்கம் நீடிக்கிறது என்பதற்கு பள்ளிக்கூட ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றவர்களிடம் இருந்து கிடைக்கின்ற ஆதாரம் அதிகரித்து வருகிறது.
 
பெண்களுடைய மர்ம உறுப்பிலிருந்து முன் தோலை நீக்குவதற்கு 1985லேயே பிரிட்டனில் சட்டத் தடை வந்துவிட்டாலும், இதில் ஈடுபடுபவர்கள் மீது இத்தனை நாளும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சகித்துக்கொள்ள முடியாத தவறு என்று சர்வதேச அபிவிருத்தி விவகாரம் சம்பர்ந்தாம நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூறுகிறது.
 
எந்த ஒரு சமூகத்தின் இன மத உணர்வையும் புண்படுத்தாமல் – அரசியல் ரீதியில் பிரச்சினை வராமல் – நடந்துகொள்ள முயல்வதால், உலக அளவில் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல்கொடுப்பதில் முன்னணி நாடு என்ற பிரிட்டனின் நிலைக்கு குந்தகம் ஏற்படுவதாக அக்குழு குறிப்பிடுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக