அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 16 ஜூலை, 2013

இராட்சத பாதத்தை கொண்ட 13 வயது சிறுவன்

பிரித்தானியாவின் மிகவும் பெரிய பாதங்களைக் கொண்ட சிறுவன் என்ற பெயரை சாம் பிரெஸ்டன் என்ற 13 வயது சிறுவன் பெறுகிறான்.

ஒக்ஸ்போர்ட்ஷியரிலுள்ள வான்டேஜ் எனும் இடத்தைச் சேர்ந்த சாமின் பாதத்தின் அளவு 18 ஆகும்.

அத்துடன் 6 அடி, 5 அங்குல உயரமான சாம் ரக்பி விளையாடுவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றான்.

பிரித்தானியாவிலேயே மிகப் பெரிய பாதத்தைக் கொண்ட இளைஞராக விளங்கும் தென் வேல்ஸை சேர்ந்த கார்ல் கிரிப்பித்தின் (19 வயது) பாதத்தின் அளவு 21 ஆகும். ஆனால் 14 வயதில் கார்லின் பாதம் இருந்த அளவை விட சாமின் பாதம் பெரிதாகவுள்ளதால் கார்லின் வயதையடையும் போது சாமின் பாதம் மேலும் இராட்சத தோற்றத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது தாயார் சாமிற்கு அணிவதற்கு என்று விசேடமாக வடிவமைக்கப்பட்ட பாதணிகளை அமெரிக்காவிலிருந்து வரவழைத்து அவருக்கு வழங்கியுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக