இத்தாலியின் முதலாவது கறுப்பின அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிசிலி கயென்கியின் தோற்றம் தனக்கு மனிதக்குரங்கொன்றை ஞாபகமூட்டுவதாக உள்ளதாக தெரிவித்த அந்நாட்டு செனட் சபை உறுப்பினர் ஒருவர் மன்னிப்புக்கோர வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளார்.
கொங்கோ ஜனநாயக குடியரசில் பிறந்து தற்போது இத்தாலிய பிரஜையாகவுள்ள சிசிலி கயென்கி கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சரவைக்கு பெயர் குறிப்பிடப்பட்டதையடுத்து, பல்வேறு இனவாத துஷ்பிரயோகங்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் குடியேற்றவாதத்திற்கு எதிரான நொதர்ன் லீக் கட்சியை சேர்ந்த செனட் சபை உறுப்பினரான ரொபேரட்டோ கல்டெரோலி கூட்டமொன்றில் உரையாற்றுகையில், சிசிலி கயென்கி ஒருங்கிணைப்பு அமைச்சராக தெரிவு செய்யப்பட்டமை இத்தாலிக்கு சட்டவிரோத குடியேற்றவாசிகள் வருவதை ஊக்கப்படுத்துவதாக உள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
''நான் கரடிகள், ஓநாய்கள் போன்ற மிருகங்களை நேசிப்பவன் என்பது அனைவருக்கும் தெரியும்'' எனக் கூறிய ரொபேர்ட்டோ, ''ஆனால் கயென்கியின் புகைப்படங்களை நான் பார்க்கையில் அவரது தோற்றம் மனிதக் குரங்கை ஒத்திருப்பதை நினைக்காமல் இருக்க முடியவில்லை'' என்று தெரிவித்தார்.
வட திரெவிஸோ நகரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ரொபேர்ட்டோவின் உரையானது அரசியல் தலைவர்களதும், சமூக ஊடகங்களதும் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
ரொபேர்ட்டோவின் விமர்சனங்கள் அனைத்து வரையறைகளையும் மீறியுள்ளதாக பிரதமர் என்றிகோ லெட்டா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக