அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 16 ஜூலை, 2013

உலகின் பழைமையான நாட்காட்டி

உலகின் மிகவும் பழைமையானது என நம்பப்படும் நாட்காட்டி ஸ்கொட்லாந்தில் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

அபெர்டீன்ஷியரில் கிரதஸ் காஸல் எனும் இடத்திலுள்ள வயலொன்றில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த நாட்காட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

10,000 ஆண்டுகளுக்கு முன் வேட்டைக்காரர்களால் மரப்பலகையிலான இந்த நாட்காட்டி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய பர்மிங்ஹாம் பல்கலைக்கழக குழுவினர் தெரிவித்தனர்.

இந்த மரப்பலகை நாட்காட்டியில் 12 மாதங்களை குறிக்கும் வகையில் 12 குழிகள் செதுக்கப்பட்டிருந்தன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக