அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 31 ஜூலை, 2013

ஃபேஸ்புக் மூலம் குடும்பத்தாருடன் இணைந்த இளைஞர்!

ஃபேஸ்புக்கால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதாக வெளியாகும் தகவல்களுக்கிடையே சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடிய இளைஞர் இதே ஃபேஸ்புக் மூலமாக தனது குடும்பத்தாருடன் இணைந்துள்ளார் என்ற செய்தி கூட வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது..

புனேயில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சரியாக படிக்கவில்லை என்று தாய் திட்டியதால் மனம் உடைந்து வீட்டை விட்டு வெளியேறினான் சிறுவன் அங்குஷ் டேமேல். அப்போது வீட்டில் இருந்து வெளியேறவன், நேராக குருத்வாரா கோயிலுக்குச் சென்று அங்கு சுவாமியை வழிபட்டு, கோயில் திருப்பணிகளை செய்து வந்தான். அங்கிருந்த குரு ஒருவர், அவனுக்கு குர்பன் சிங் என்று பெயரிட்டு, அவனை பராமரித்து வந்தார். அந்த சிறுவனும், தலையில் டர்பனைக் கட்டிக் கொண்டு நீண்ட தாடியுடன் கோயில் பணிகளை செய்து வந்த அங்குஷ், பல வழிகளில் தனது குடும்பத்தாரை தேடும் பணியிலும் ஈடுபட்டு வந்தான்.

இறுதியாக, ஃபேஸ்புக்கில் தன்னை விட இரண்டு வயது குறைந்த தனது சகோதரனின் சந்தோஷ் என்ற பெயரை தேடி, அவனை தொடர்பு கொண்டு தன்னை பற்றி கூறினான்.இதையடுத்து, உடனடியாக அங்குஷ், குடும்பத்தாரை சந்திக்க, குருவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். தலையில் டர்பனும், தாடியுடனும் பார்த்த குடும்பத்தாருக்கு அங்குஷின் தோற்றம் விசித்திரமாக இருந்தாலும், அவனது நினைவுகள் அவர்களை ஒன்று சேர்த்தது.ஃபேஸ்புக் மூலமாக தனது குடும்பத்தாரை எளிதாக கண்டுபிடித்த அங்குஷ், தன்னை நல்வழிப்படுத்திய குருவுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.



ஆந்தைரிப்போர்ட்டர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக