அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 31 ஜூலை, 2013

ஃபேஸ் புக்கில் இங்கிலாந்து குட்டி இளவரசர் பெயரில் உலாவரும் வைரஸ்

இங்கிலாந்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் பெயரில் வைரஸ் பரவி வருவதால் மக்களுடன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன், கடந்த 22ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இங்கிலாந்தின் வருங்கால அரசரான அந்த குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயி என்று பெயரிட்டுள்ளனர்.இந்நிலையில் ஜார்ஜ் பெயரில் இணையத்தில் புதிய வைரஸ் பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதாவது, பேஸ்புக்கில் ராஜ குழந்தை பற்றிய வீடியோ குறித்த இணையதள லிங்க் போஸ்ட் செய்யப்படுகிறது.அந்த லிங்கை கிளிக் செய்தால் வீடியோ பிளேயரை அப்டேட் செய்ய கேட்கிறது.

நீங்கள் ஓகே பட்டனை கிளிக் செய்தால் வைரஸ் தரவிறக்கம் ஆவதுடன், அது நம் கணனியில் உள்ள தகவல்கள், வங்கி தொடர்பான தகவல் உள்ளிட்டவைகளை ஸ்கேன் செய்துவிடுகிறது.அதனால் ராஜ குழந்தை பற்றிய லிங்க் இருந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக