அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 30 ஜூலை, 2013

சிஸ்டம் ஆன் சிப் என்பது என்ன?

மொபைல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில், மிகத் திறன் வாய்ந்த சிப் டிசைன் என இதனை அழைக்கின்றனர். வழக்கமான கம்ப்யூட்டிங் சிஸ்டத்தில், சிபியு, ஜிபியு, சவுண்ட் ப்ராசசர், கிராபிக்ஸ் கார்ட் எனப் பல தனித்தனியாக வரையறை செய்யப்பட்ட ஹார்ட்வேர் பிரிவுகள் இணைக்கப்பட்டு கிடைக்கும்.

இவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டம் இணைத்துச் செயல்படுத்தும். ஆனால், சிஸ்டம் ஆன் சிப்பில் (SoC) இவை அனைத்தும் ஒரு சிப்பில் பதியப்பட்டுக் கிடைக்கிறது. இப்படி பல பணிகளை மேற்கொள்ளும் தனித் தனி டிஜிட்டல் இயக்கங்கல், ஒரே சிப்பில் பதியப்பட்டு, பணிகளை மேற்கொள்ள கிடைப்பதனால் தான், ஸ்மார்ட் போன் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் நமக்கு சாத்தியமாகின்றன.

அவற்றில், வீடியோ, ஆடியோ, மோஷன் சென்சார், கேமரா ஆகியவற்றின் இயக்கங்களை மேற்கொள்ள முடிகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக