அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 30 ஜூலை, 2013

வேர்டில் தயாரிக்கப்படும் டாகுமெண்ட் ஒன்றை, வெப் தளத்திற்கான பக்கமாக சேவ் செய்திட

இணைய தள பக்கமாகப் பயன்படுத்த விரும்பும் டாகுமெண்ட்டினை முதலில் தயார் செய்திடவும். பின்னர், மற்ற வழிகள் அனைத்தும் எளிதுதான்.

டாகுமெண்ட்டைத் தயார் செய்த பின்னர், எப்12 அழுத்தவும்.

இனி Save As டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

இங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில் HTML Document or Web Page என்பதனை உங்களுக்கான பைல் பார்மட்டாகத் தேர்ந்தெடுக்கவும்.

File Name கட்டத்தில், பைலுக்கு நீங்கள் கொடுக்க விரும்பும் பெயரைக் கொடுக்கவும்.

வேர்ட் பார்மட்டிலிருந்து, இணைய பக்க பார்மட்டுக்கு மாறுகையில், ஒன்றிரண்டு அம்சங்கள் காணாமல் போகலாம்.

பின்னர், Save என்பதில் கிளிக் செய்திடவும்.

இப்போது நீங்கள் விரும்பிய வகையில் டாகுமெண்ட் எச்.டி.எம்.எல். பைலாக சேவ் ஆகும். இந்த பைலை ஒரு பிரவுசரில் திறந்து பார்த்து சரியாக வந்துள்ளதா என சோதித்துக் கொள்ளவும்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக