அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

திருக் கல்யாணம்! தமிழீழக் கல்யாணம்!! தமிழ்க் கல்யாணம்!!!

ஆமாம் செப்ரம்பர் 8ம் தினம் சீறும் சிறுத்தைத் தமிழன் சீமானுக்கு கல்யாணம் நடைபெறவுள்ளது. அது யாருடன்.... நடிகையுடனா...? அல்லது புலம் பெயர் தேசத்து இலங்கைத் தமிழ் பெண்ணுடனா? அல்லது தமிழீழப் போராளி விதவைப் பெண்ணுடனா?

இல்லவே இல்லை தமிழ்நாடு அரசியல் புள்ளி காளிமுத்துவின்மகளுடன். காளிமுத்து எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே திமுக, அதிமுக கட்சிகளில் முக்கிய புள்ளி அமைச்சரவை பிரமுகர். பின்பு சொல்ல வேண்டுமா?

தமிழக அரசியலில் பணக்காரர். இவரின் பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளையுடன் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

அப்ப இது திருக் கல்யாணமா?

அல்லது தமிழீழக் கல்யாணமா...?

அல்லது தமிழ்க் கல்யாணமா...?

இல்லவே இல்லை இது பணக் கல்யாணம். பிறகென்ன திழ்நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிப் பிரமகர்களும் ஆளாளுக்கு ஆள் முண்டியடித்துக்கொண்டு கலந்து கொள்ளும் கல்யாணம் இது.

சீமானின் கடைசியாக பெண்பார்த்த தமிழீழ விதவைப் பெண் கண்ணீர்விட்டு இன்னும் ஒருமுறை விதவை? (தமிழ்க் கலாச்சார முறைப்படி) ஆகவேண்டியதுதான்.

பிரபாகரனின் ஒரே வாரிசு புலம் பெயர் தேசத்து புலிச் சிறுத்தைகளின் மீட்போன் இப்படிப் பண்ணலாமா...? என்ற கேட்கலாம் நீங்கள்.

தலைவரே இன்னொருவர் காதலித்தவரை கவர்ந்து வந்து கல்யாணம் செய்தவர் ஆயிற்றே.

தலைவன் இத்தனை அடி பாய்தால் அவர் வழிச் சிறுத்தை இத்தனையடி கூடப் பாயக்கூடாதா....?

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா. விட்டிட்டு வேலையைப் பார்பீர்களோ இல்லையோ இது நடைபெறத்தான் போகின்றது.

என்ன நாளை நாம் எல்லோரும் இதனை மறந்து மன்னித்து தலைவனாக சீமானை ஏற்போம் மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு மக்களை அழைத்துச்செல்வோம் பிறகென்ன எல்லாம் சங்காரம்தான்.

தமிழ் மக்கள் சிலர் திருந்தவே போகப்போறது இல்லை. அப்புக்காத்திற்கு
எல்லாம் அப்புக்காத்து விக்னேஸ்வரனை நாம் ஏற்கவில்லையா...?

பொனம்பலத்தானால் கையைச் சுட்ட நாங்கள் இந்த புதிய அப்புக்காததுதக்கெல்லாம் அப்புக்காத்தை ஏற்றவில்லையா...?

இது போலத்தான் இதுவும். மீண்டும் உண்டியல் குலுக்கவும் பணம் சம்பாதிக்கவும் நாங்கள் தயார் நீங்கள் தயாரா...? என சீமான் வகையறாக்கள் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே கேட்பது எனக்கு கேட்கின்றது உங்களுக்கு கேட்கவில்லையா.....?

இந்தத் திருமணத்திற்கு என்ன விளக்கம் சொல்லப் போகின்றார்கள் சினிமாக்காரர்கள் அமீர், சேரன், சத்தியராஜ்... போன்றோர்.

(சாகரன்)


(ஆகஸ்ட் 07, 2013)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக