அழகிய கண்களுக்கு மயங்கா தோர் எவருமிலர். ஐம்பொறிக ளில் ஒன்றான இக்கண்கள் வாயிலாக, அவனியின் மேற்பரப்பில் உள்ள இயற்கைக் காட்சிகளையும் மனிதர் உருவாக்கிய செயற்கைக் காட்சிகளையும் பார்த்து அநுபவிக்க முடிகிறது. எனினும் வயது அதிகரிக்கையில் பார்வைத்திறன் குறைவடைந்து ஏனையோரில் தங்கியிருக் கும் நிலை முதியோருக்கு ஏற்படுகிறது. இக்காரணத்தால் முதுமைப் பருவத்தினர் ஏனையோரின் வசவுகளையும் ஏளனங்க ளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. முதுமையடைதல் மட்டுமன்றி நீரிழிவு காரணமாகவும் retinitis pigmentosa என்ற நோய் காரணமாகவும் பார்க்கும் திறன் இழக்கப்ப டும் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இவ்வாறாக பார்வைத்திறன் இழக்கப்பட் டால், அந்நிலைமை நிரந்தரமானது என்ற கருத்து, அறிவியல் ஆய்வொன்றின் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. மனித தண்டுக் கலத்தின் (Stem cell) உதவியுடன் இழக்கப்பட்ட பார்வைத்திறன் மீளவும் நிலைநாட்டப்பட முடியும் என பிரித்தானியா நாட் டினைச் சேர்ந்த அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர். இந்த ஆய்வு எலிகளில் பரிசோதிக்கப்பட்டு வெற்றிகரமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எமக்கு முன்னே காணப்படும் பொருளொன்றில் இருந்து வரும் ஒளி கண்களை அடைந்து, கண்வில்லையின் ஒளியியல் பண்பு காரணமாக, அது விழித்திரையில் தலைகீழான மெய்விம்பத்தினைத் தோற்றுவிக்கிறது. அந்த மெய்விம்பத்தினை உண ரும் பார்வைப்புலன்; உணர்வு மேலணி, பெறப்படும் ஒளியின் தன்மைக்குத் தக்கவாறு நரம்புக் கணத்தாக்குகளை தகவல்களாகப் பிறப்பிக்கிறது. அக்கணத்தாக்குகள் நரம்புகள் வழியே பயணித்து, மூளையினை அடைகையில், அக்குறிப்பிட்ட பொருள் எமக்குத் தெரிகிறது. பார்வைப்புலன் உணர்வு மேலணியில் இருவகையான, ஒளிக்கு நரம்புக் கணத்தாக்குகளைக் பிறப்பிக்கக் கூடிய கலங்கள் காணப்படுகின்றன. அக்கலங்களில் கூம்பு வடிவிலான கலங்கள் நிறத்திற்கு உணர்ச்சி மிக்கவை. ஆனால் உருளை வடிவக் கலங்கள் நிறத்திற்கு அதிக உணர்ச்சி கொண்டவையல்ல, எனினும் அவை குறைந்த ஒளியி லும் பார்ப்பதற்கு வழிவகுக்கும் வகை யில் அதிக உணர்வு கொண்டவை. இக்கலங்கள், மனிதன் முதுமை அடைகையில், அல்லாவிடின் நோய் காரணமாக அழிவடைகையில் பார்வைத்திறன் குறைவடைய ஆரம்பிக்கிறது.
ஐக்கிய இராச்சிய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் நிதியுதவியின் கீழ் இழக்கப்பட்ட பார்வைத்திறனை மீள வருவிக்கும் ஆய்வுகளை University College London's Institute of Ophthalmology மற்றும்; Moorfields கண் வைத்தியசாலை ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்டு வந்தனர். பேராசிரியர் Robin Ali தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் விபரங்கள் அண்மையில் பிரசுரமான அறிவியற் சஞ்சிகை Nature Biotechnology இல் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் ஜப்பானிய அறிவியலாளர்க ளால் வடிவமைக்கப்பட்ட முப்பரிமாண கலவளர்ப்பு முறைமையினை பிரித்தானிய ஆய்வாளர்கள் தமது ஆய்விற்கு உபயோ கித்துள்ளனர். இப்புதிய முறையினால் வளர்த்தெடுக்கப்படும் கலங்கள், சுயமாக வளரும் கலங்களுக்கு உயிரியல் ரீதியில் சமனானவை. இவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்ட தண்டுக்கலங்களில் 200 000 எண்ணிக்கையான கலங்களை, இரவில் பார்க்கும் திறனை இழந்த எலிகளின் விழித்திரைக்கு ஆய்வாளர்கள் செலுத்தினர்.
இந்தச் செயல்முறையை நடைமுறைப்படுத்தி 3 வாரங்களின் பின்னர் அவதானிக்கையில், செலுத்தப்பட்ட கலங்கள் சாதாரண கலங்கள் போல தோற்றமளித்ததுடன் ஒளிக்கு நரம்புக் கணத்தாக்குகளைப் பிறப்பிக்கும் கலங்களாக உருமாறி வளர்ச்சி பெற்றன. ஆறு வாரங்களின் பின்னர் நடைபெற்ற மாற்றங்களை நோக்குகையில், புதிதாக உருவாகிய ஒளிக்கு துலங்கல் தரும் அக்கலங்கள் ஏலவே இருந்த பார்வை நரம்புகளுடன் இணைப்புக்களை ஏற்படுத்தியிருந்தமை அவதானிக்கப்பட்டது. இவ்வாறாக புதிய பார்வையினைத் தரும் கலங்களை உருவாக்கி, அவற்றினூடாக பார்வைத்திறன் குன்றியோருக்கு பார்வை அளிக்கும் புதியதோர் பாதை அறிவியலால் திறக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட அணுகுமுறையில் 200 000 எண்ணிக்கையிலான கலங்கள் செலுத்தப்பட்டபோதிலும் சுமார் 1000 வரையிலான கலங்களே எதிர்பார்த்தவாறு இயைபடைந்து நரம்புக் கலத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த வினைத்திறன் குறித்து அறிவியலாளர்கள் திருப்தி அடையாவிடினும் தொடர்ந்து முயற்சிக்க அவர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
விலங்குகளில் மேற்குறிப்பிட்ட ஆய்வினை துல்லியமாக நிகழ்த்தி வினைத்திறனையும் வெற்றிகரமான முடிவுகளையும் உறுதிசெய்த பின்னர், மனிதரில் இந்த பார்வைப்புலனை மீள வருவிக்கும் முயற்சியினை மேற்கொள்ள ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்தத் திட்டமிடல்கள் வெற்றியளிக்கும் பட்சத்தில், முதுமையாலோ அல்லாவிடின் ஏனைய நோய்களாலோ பார்வை இழந்தவர்கள் மீண்டும் அதனைப் பெற்றுக்கொள்ள வழிபிறக்கும் என நம்பலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக