அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

ஊது­பத்­திகள் கொளுத்­து­வது வீடு­களின் உட்­புறக் காற்று மாச­டைதல்

அவ­ருக்கு இருமல். கடு­மை­யான இருமல் அல்ல. வேலைக்குப் போகிறார். வேலைத் தளத்தில் ஏ.சி உள்­ளது. இவரால் அங்கு எவ­ருக்கும் தொல்லை இல்லை. அங்கு இரு­மலே வரு­வ­தில்லை. ஆனால் வீடு திரும்­பி­யதும் இருமல் தொடங்­கி­விடும். படுக்கச் சென்றால் மிக அதிகம். இரவு இருமல் என்றால் ஆஸ்து­மாவா?

தீர விசா­ரித்­த­போ­துதான் காரணம் தெரிந்­தது. அவர்­க­ளது வீட்--டின் காற்­றோட்டம் போது­மா­னது அல்ல. அத்­துடன் அ-ந்தக் காற்று மாச­டைந்­த­தாக இருக்கும் என்­பது புரிந்­தது. வீட்-டின் காற்று மாச­டைத்­த­லுக்கு முக்­கிய காரணம் புகைத்­த-­லாகும். ஆனால் இவர் புகைப்­ப­தில்லை. வீட்டில் வேறு யாரும் புகைப்­பதும் இல்லை.

வீட்டின் உட்புறக் காற்று மாச­டை­வது என்­பது உல­க­ளா­விய ரீதியில் பாரிய சுகா­தாரப் பிரச்­சி­னை­யாக மாறி­யுள்­ளது. உல-­க­ளா­விய ரீதியில் வரு­டாந்தம் ஒரு மில்­லி­ய­னுக்கு மேற்­ப-ட்­ட­வர்கள் சுவாச நோய்­களால் மர­ண­ம­டை­வது குறிப்­பி­டத்­தக் -­கது. இவற்றில் பெரும்­பா­லா­னவை அடுப்புப் புகை­களால் ஏற்-­படும் மாசுக்­களால் ஆகும். சுகந்த மணத்தை ஏற்­ப­டுத்தும் புகை­களும் அத்­த­கை­ய­வையே.

ஆய்வு

வீட்­டிற்குள் சாம்­பி­ராணிக் குச்சி போன்ற வாசனை ஊது பத்­தி­களைக் கொளுத்­து­வ­தா­னது வீட்டின் உட்­புறக் காற்றை மாசு­ப­டுத்தி சுவா­சப்­பையில் உள்ள கலங்­களில் அழற்­சியை ஏற்­ப­டுத்­து­கி­றது என அண்­மையில் செய்­யப்­பட்ட ஆய்வு ஒன்று கூறு ­கி­றது.

அரே­பிய நாட்டு வீடு­களில் அதிகம் கொளுத்­தப்­படும் இரு­வகை சாப்­பி­ரா­ணி­களைப் புகைக்க வைக்­கும்­போது வெளி­வரும் துகள்­ளையும் வாயுக்­க­ளையும் ஆய்­வா­ளர்கள் இனங்­கண் ­டார்கள். பின்னர் மனித சுவாசப் பையின் கலங்கள் வைக்­கப்­ப ட்ட அறையில் அவ் வாசனைப் பொருட்­களை புகைக்க வைத்­தார்கள். அப்­பொ­ழுது அந்தக் கலங்­களில் ஏற்­பட்ட மாற்­றங்­க­ளா­னவை சிகரெட் புகைப்­பதால் ஏற்­படும் மாற்­றங்­களை ஒத்­த­தாக இருந்­ததைத் கண்­ட­றிந்­தார்கள்.

Oudh and Bahkoor ஆகிய அந்த வாசனைப் பொருட்­களில் அகர்வூட் மரத்­தி­லி­ருந்து எடுக்­க­ப்பட்­ட­வை­யாகும். வாச­னை யைக் கொடுக்கும் சந்­தன மரப்­பிசின், சில எண்ணெய் வகை கள் போன்­ற­வையும் கலந்­தி­ருந்­த­னவாம். அவற்றை எரிக்­கும்­போது carbon monoxide, formaldehyde, nitrogen oxides ஆகிய வாயுக்கள் வெளி­யேறி அறையின் காற்றை மாச­டையச் செய் ­தன. “எனவே இவற்றை எரிக்­கும்­போது வீட்டின் ஜன்­னல்­க­ளையும் கத­வு­க­ளையும் திறந்து வைத்து அப்­பு­கையை வெளி­யேறச் செய்து வீட்டின் காற்றை மாச­டை­யாது காப்­பது அவ­சியம்” என்­கி­றார்கள் University of North Carolina at Chapel Hill சேர்ந்த ஆய்­வா­ளர்கள்.

இவர்கள் முன்பு செய்த மற்­றொரு ஆய்­வா­னது இந்த சுகந்த மணப் புகை­களால் கண், காது தொண்டை, சருமம் போன்­ற­வற்றில் எரிச்சல், ஆஸ்த்­துமா, வேறு சுவாச நோய்கள், தலை­வலி, இரு­தய நோய்கள் போன்­றவை ஏற்­ப­டலாம் என்­றது.

உட்­புற வளி மாச­டைதல்

உட்­புற வளி மாச­டைதல் என்­பது வீட்டு வளி மாத்­திரம் அல்ல. வீடு, தொழில் செய்யும் இடம் அனைத்­தையும் உள்­ள ­டக்கும்.

உட்­புற வளியின் தரம் குறை­வ­டை­வதால் கிருமித் தொற்­று கள் ஏற்­ப­டு­கின்­றன. சுவா­சப்பை புற்று நோய் வரு­வ­தற்­கான வாய்ப்பை அதி­க­ரிக்­கி­றது. அத்­துடன் ஆஸ்துமா போன்ற நீண்டு தொடரும் சுவாச நோய்கள் வரு­வ­தற்­கான சாத்­தி­ய மும் அதி­க­ரிக்­கி­றது. மூக்­க­டைப்பு, கண் வரட்சி, ஓங்­காளம், களை ப்பு போன்ற பிரச்சி­னை­களும் ஏற்­ப­டலாம். ஏற்­க­னவே சுவாச நோய்கள் உள்­ள­வ­ர்களுக்கு அது மோச­மாகும்.

இதைத் தடுப்­ப­தற்கு வழி என்ன?

மிக முக்­கி­ய­மான விடயம் வளியை மாச­டையச் செய்யும் கார­ணங்­களைக் கண்­ட­றிந்து அவற்றைத் தடுப்­ப­துதான். அத்­து டன் காற்­றோட்­டத்தை அதி­க­ரித்து சுத்­த­மான காற்று உள்ளே வரு­வ­தற்­கான வழி­களை மேம்­ப­டுத்த வேண்டும்.

உட்­புறக் வளி மாச­டை­வ­தற்­கான சில முக்­கிய கார­ணங்­க ளைப் பார்க்­கலாம்.

உயி­ரியல் மாசுகள்

பக்­றீ­ரியா, வைரஸ், பூஞ்­சணம், விலங்கு எச்­சங்கள், தூசிப் பூச்சி மற்றும் கரப்­பொத்­தானின் எச்­சங்கள், போன்­றவை உயி­ரி யல் மாசு என்­பதில் அடங்கும்.

இவற்­றினால் உடலில் கிரு மித் தொற்று ஏற்­ப­டு­கி­றது. ஒவ்­வா­மையை ஏற்­ப­டுத்­து­கி­றது. அத்­துடன் ஆஸ்துமா தூண்­டப்­ப­டு­வ­தற்கும் கார­ண­மா­கி­றது. இவை சிறிய பிரச்சினை எனச் சிலர் எண்­ணி­னாலும் இவற்றால் வேலை நாட்­களில் இழப்பு ஏற்­ப­டு­கி­றது. அத்­துடன் பிள்­ளை­க ளின் கல்­வியும் பாதிப்­ப­டை­கி­றது.

நாய் பூனை போன்­ற­வற்றை உள்ளே நுழை­யாது தடுப்­பது முக்­கியம். அத்­துடன் தூசிப் பூச்­சியின் தாக்­கத்தைத் தடுப்­ப­த ற்கு படுக்கை விரிப்பு, தலை­யணை உறை, துணி­யா­லான கால் மதிகள், மேசை கதிரை விரிப்­புகள் ஆகி­ய­வற்றை அடிக்­கடி தோய்ப்­ப­துடன் வெயிலில் உலர வைப்­பது அல்­லது ஸ்திரி போடு­வது அவ­சி­ய­மாகும்.

மறை­முகப் புகைத்தல்

மறை­முகப் புகைத்தல் (Second hand Smoke) ) என்­பது ஒளித்­தி­ருந்து புகைப்­பது என்­ப­தல்ல. தான் புகைக்­கா­விட்­டாலும் சுற்­றாடலில் மற்­ற­வர்கள் புகைப்­ப தால் ஏற்­படும் பாதிப்­பையே குறிக்­கி­றது. கார்பன் மொனோ ஒக்சைட், போர்­மல்­டிஹைட் உட்­பட சுமார் 200 மேற்­பட்ட புற்­று­நோயைத் தோற்­று­விக்கக் கூடிய நச்சுப் பொருட்கள் மறை­முகப் புகைத்­தலால் காற்றில் கலக்­கின்­றன. அமெ­ரிக்­காவில் மட்டும் இவ்­வாறு வீட்டு வளியில் கலக்கும் புகை­யிலைப் புகை­யினால் 3000 மேற்­பட்­ட­வர்கள் சுவா­சப்பை புற்று நோயால் இறக்­கின்­ற­னராம். அத்­துடன் 50000 பேர் இரு­தய நோய்­களால் இறக்­கின்­றனர்.

குழந்­தை­க­ளிலும் இதனால் பாரிய பாதிப்பு ஏற்­ப­டு­கி­றது. நியூ­மோ­னியா, சளி­நோய்கள், காதில் கிருமித் தொற்று போன்­றவை ஏற்­ப­டு­கின்­றன. சிறி­ய­வர்­க­ளிலும் பெரி­ய­வர்­க­ளிலும் ஆஸ்துமா தோன்­று­வ­தற்கும் ஏற்­க­னவே இருக்கும் ஆஸ்துமா மோச­ம­டை­வ­தற்கும் மறை­முகப் புகைத்தல் கார­ண­மா­கி­றது.

இதைத் தடுக்க ஒரே வழி புகைக்­கா­தி­ருப்­ப­துதான். அத்­து டன் குழந்­தை­க­ளுக்கு அரு­கிலும், வீடு, தொழி­லகம், உணவு சாலைகள் போன்ற மக்கள் கூடும் இடங்­க­ளிலும் புகைக்­கா­தி­ருக்க வேண்டும்.

எரிப்­பதால் வரும் மாசு­பா­டுகள்

விறகு, காஸ், எண்ணெய், நிலக்­கரி, போன்றவற்றை எரிப்­ப­தாலும் வெளி­யா கும், புகை மற்றும் வாய்­வுகள் வளியை மாச­டையச் செய்யும். அடுப்பு, விளக்கு, குளிர்காயும் இடம் போன்­ற­வற்­றி­லி­ருந்து வெளி­யாகும் புகைகள் உதா­ர­ணங்­க­ளாகும். வெளிப்­ப­டை­யாகத் தெரி யும் புகையை விட நிறமும் மண மும் அற்ற வாயு­வான கார்பன் மொனோ ஒக்சைட், நைதரன் டை ஒக்சைட் போன்­றவை ஆபத்­தா­னவை.

தலை­யிடி, மாறாட்டம், ஓங்­காளம், தலைச்­சுற்று, களைப்பு போன்ற அறி­கு­றி­களை கார்பன் மொனோ ஒக்சைட் கொண்டு வரும். அதன் செறிவு அதி­க­மா யின் ஆர்­பாட்­ட­மின்றி மர­ணத்­தையும் கொண்டு வரலாம். நைத ரன் டை ஒக்சைட் வாயுவால் கண், காது தொண்டை ஆகி­ய­வற்றில் அரிப்பு, மூச்சு எடுப்­பதில் சிரமம் ஏற்­படும். அத்­து டன் கிருமித் தொற்­று­க­ளுக்கும் வித்­திடும்.

ரேடன் (Radon)

ரேடன் என்­பது கதி­ரி­யக்­கத்தின் சிதைவால் உண்­டாகும் வளி வடிவக் கதி­ரி­யக்கத் தனி­ம­மா கும். இது வீட்டின் சுவர், நிலம், அத்­தி­வாரம், வடி­கால்கள் போன்­ற­வற்றில் ஏற்­படும் வெடிப்­பு­க­ளி­லி­ருந்து வெளி­யே­று­கி­றது. இதனால் அமெ­ரிக்­காவில் மாத்­திரம் வரு­டாந்தம் 21,000 பேர் சுவாசப் புற்­று­நோயால் நோயால் மர­ண­ம­டை­கி­றார்கள் என அறிக்­கைகள் கூறு­கின்­றன. எமது நாடு­களில் இது பற்­றிய பிரக்­ஞையே கிடை­யாது

ஆஸ்­பரோஸ் அல்­லது கல்நார்

கூரைத் தக­டு­க­ளாக உப­யோ­கிக்கும் ஆஸ்­பரோஸ் ஆனது நுண்­ணிய நார்­க­ளா­லா­னது. இதன் தூசி­யி­லி­ருந்து ஆஸ்­ப­ரோசிஸ் எனப்­படும் சுவா­சப்பை அழ ற்சி, சுவாசப் புற்­றுநோய் போன்­றவை ஏற்­ப­டு­கி­றது. இதை உற்­பத்தி செய்யும் தொழிற்­சா­லை­களில் வேலை செய்­ப­வர்­க­ளுக்கு பாதிப்பு அதிகம் ஏற்­டலாம் என்­பதால் அவற்றை ஆரம்ப நிலையில் கண்­ட­றி­வ­தற்­கா­கவே காலக்­கி­ர­மத்தில் மருத்­துவப் பரிசோ­த­னைகள் செய்­யப்­ப­டு­கின்­றன.

இன்னும் ஏராளம்

இவற்றைத் தவிர நாளாந்தம் நாம் உப­யோ­கிக்கும் இன்னும் பல பொருட்கள் காற்றை மாசு­ப­டுத்­து­கின்­றன.

ஓட்டுப் பலகை, தள­பா­டங்கள், தரைக்­கம்­பளம் போன்­ற­வற்றை ஒட்­டு­வ­தற்கு பயன்­ப­டுத்தும் திர­வத்­தி­லி­ருந்து வரும் போர்­மல்­டிஹைட் ஆனது கண்­கடி, இருமல், தொண்டை அரி ப்பு, சரும அழற்சி, தலை­யிடி, தலைப்­பாரம் போன்ற பல பிரச்­ச­னை­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

வீடு, கழிப்­பறை, சமை­ய­லறை போன்ற இடங்­களை சுத்­தப்­ப­டுத்தும் பொருட்கள் கரப்­பொத்தான் எலி போன்­ற­ வற்­றிற்­கான கிரு­மி­நா­சி­னிகள், பெயின்ட் வகைகள் போன்­ற­ வையும் சூழலை மாசு­ப­டுத்­து­கின்­றன. அவற்றை உப­யோ­கிக் கும் போது பயன்­ப­டுத்தும் முறை பற்றி தயா­ரிப்­பாளர் தந்த குறிப்­பு­களை சரி­யாகக் கடைப்­பி­டிக்க வேணடும்.

இறு­தி­யாக

இன்று ஒவ்­வாமை எனப்­படும் அலர்­ஜி­யுடன் தொடர்­பு­டைய நோய்கள் அதி­க­ரித்­துள்­ளன. கண் கடி, காதுக் கடி, தும்மல், மூக்கால் ஓடுதல், தொண்டை அரிப்பு, இருமல், ஆஸ்துமா. சரு­ம­நோய்கள் யாவும் அதி­க­ரித்­துள்­ளன.

“சூழுல் மாச­டை­கி­றது, கவனிப்பார் இல்லை” என அரசையும் மற்றவர்களையும் குறை கூறுகிறோம்.

எமது சூழலை, எமது வீட்டை, அதன் காற்றை சுத்தமாக வைத்திருக்க நாம் என்ன செய்திருக்கிறோம் என எம்மை நாமே கேட்பது பயனுள்ளது.

வெடிப்புளள சுவர்கள். ஜன்னல் பொருத்திய இடத்துப் பிரி வுகள், அழுக்கான பூஞ்சணம் படிந்த சுவர்கள், புகை அடுப்பு, நுளம்புத்திரி, சாம்பிராணிக் குச்சு, கரைந்து உதிரும் பெயின்ட் எனப் பலவற்றையும் அலட்சியம் செய்துவிடுகிறோம். எமது வீட்டின் உட்புற வளியை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அதற்கு விலையாக நோய்களை வாங்க வேண்டி நேரும்.

ஆரம்பத்தில் குறிப்பிட்டவருக்கு அதுதான் நடந்தது. படுக்கை அறையும் சுவாமி அறையும் அவர் வீட்டில் ஒன்றே. அங்கு சாம்பிராணி தினமும் கொழுத்திய புகையால் அலர்ஜியாகி இருமல் வந்தது. ஆஸ்துமாவாக மாறிவிட்டது.

நீங்களும் அவதானமாக இருங்கள்.

டொக்டர்.எம்.கே.முரு­கா­னந்தன்
குடும்ப மருத்­துவர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக