வரலாற்றில் இடம்பிடித்த சாதனையாளர்களைப் பார்க்கின்றபோது ஒவ்வொரு தனி மனிதனும் தனது ஆளுமையாலும் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையுடனுமே வாழ்க்கைப் பாதையில் தடம்பதித்துச் சென்றுள்ளனர். அந்தவகையில் ஐரோப்பிய வரலாற்றில் மட்டுமின்றி உலக வரலாற்றில் தனக்கென தனித்துவமான இடத்தினை தக்க வைத்து வாழ்க்கைச் செய்திகளை உலகிற்கு விட்டுச் சென்ற மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கைச் சரிதையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன.
கோர்சிக்கா தீவிலுள்ள அஜாசியா என்ற கிராமத்தில் தந்தை சார்லஸ் போனபாட் டிற்கும் தாயான லெட்டீசியாவிற்கும் மகனாக 1769 ஆகஸ்ட் 15ஆம் திகதி பிறந்தான். இன்று நெப்போலியன் என்றதுமே நம் மன க்கண் முன் ஓர் சிறந்த வீரனாகவும் வலிமை யுடையவனாகவும் பிரான்ஸியச் சக்கரவர்த்தியாகவும் உதயமாகின்றான். ஆனால் இவனது இளமைப் பருவம் பல சோதனைகளும் வேதனைகளும் நிறைந்தது.
நெப்போலியனின் குடும்பம் மிக வறுமையானது. சிறுவயதிலிருந்தே இராணுவக் கல் லூரியில் பயில வேண்டும் என்ற பேரவா அவனுடன் குடிகொண்டிந்தது. இதனால் அவனது விருப்பத்தினை அறிந்த பெற்றோர் பாரிஸ் நகரத்திலுள்ள பீரையன் இராணுவக் கல்லூரியிலே சேர்த்து விட்டனர். பத்து வயதிலே தாயைப்பிரிந்த அக்குழந்தை தாயின் பாசத்திற்கு ஏங்கியது. இருப்பினும் பின்னர் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டது.
உண்மையில் அந்த இராணுவக்கல்லூரி செல்வந்த மாணவர்கள் படிக்கின்ற பாட சாலை என்பதனால் நெப்போலியன் வறுமையின் காரணமாக மாணவர்களால் ஒதுக்கப்பட்டான். எனவே நெப்போலியன் தனிமையின்போது தனது நண்பனாக நல்ல கதைப்புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தான். ‘கற்காத நாள் எல்லாம் பிறவாத நாள்’ என்ற சிந்தனையோடு செயற்பட்டான். ஓய்வு நேரங்களில் நூலகத்திற்குச் சென்று மாமனிதர்களின் சரிதைகளையும் அவர்கள் நாட்டிற்கு செய்த சேவைகளையும் வாசித்து அகமகிழ்வடைந்தான். ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்தையும் உயர்வையும் தாழ்வையும் குறித்துச் சிந்தித்தான்.
இவன் பல தடவை தனது அன்னைக்கு கடிதங்கள் எழுதுகின்றபோது ‘ஹோமரின் காவியத்தின் தெளிவாலும் கத்தியின் துணை யாலும் நான் உலகத்தினை ஆட்டிவைக்கப் போகின்றேன்’ எனவும் ‘மனிதனுடைய திற னைக் கவனியாமல் அற்பமாகிய பிறப்பின் காரணமாகவே பதவிகள் அளிக்கப்பட்டு வந்த வழக்கத்தினை மாற்றியமைப்பேன்’ எனக் குறிப்பிட்டிருந்தான். ஒரு தடவை கோர்சிக்காத் தலைவருக்கு எழுதிய கடிதமொன்றில் ‘தேசம் அழிந்து கொண்டிருந்தபோது நான் பிறந்தேன். நமது கடற்கரையில் இறக்கப்பட்ட முப்பதினாயிரம் பிரான்ஸியர் கள் தமது சுதந்திரத்தை குருதி அலைகளுக் குள் அமிழ்த்தினர். இந்த வெறுக்கத்தக்க காட்சியே எனக்கு முதலில் புலப்பட்டது. இந்நிலையை நான் மாற்றியமைப்பேன். எனக் குறிப்பிட்டிருந்தார். அன்று ‘இந்தச்சிறிய தீவு என்றோ ஒருநாள் ஐரோப்பாவை வியப்பில் ஆழ்த்தப்போகின்றது என்பதை நான் உணருகின்றேன்’ என ரூசோ குறிப்பிட் டார். சமகாலத்தில் இதன்பொருள் பலருக்கு விளங்கவில்லை. ஆனால் பிற்காலத்தில் நெப்போலியனின் செயற்பாடுகள் அதனை வெளிப்படுத்தியபோதுதான் பலராலும் அதனை உணர முடிந்தது.
ஒருமுறை 1784இல் மழைக்காலத்தில் அதிகமான பனிக்கட்டிகள் இராணுவக் கல்லூரியைச் சுற்றிலும் விழுந்து பாறை பாறையாக உறைந்து கிடந்தன. இதனால் மாணவ ர்களால் விளையாட வெளியே செல்ல முடியவில்லை. இதனைக்கண்ட நெப்போலியன் நண்பர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து பனிக்கட்டிகளால் அரண்மணை அமைத் தான். இருகுழுக்களும் இணைந்து அகழி யும் கொத்தளங்களும் சூழ்ந்த பேரணை அமைத்தனர். பின்னர் இரண்டு மாணவக்குழுக்களில் ஒருபிரிவினர் அதனைத் தாக்கு மாறும் மற்றைய பிரிவினர் அதனைத் பாதுகாக்குமாறும் கூறி புத்திக்கூர்மையால் போர்முறைகளைப் புகட்டினான்.
16 வயதானபோது பிரான்ஸின் பீரங்கிப்படையில் சிறிய பதவியில் அமர்த்தப்பட் டான். ஆனால் அந்தவேலையில் அதிக அக் கறை காட்டவில்லை. சமகாலத்தில் பிரான் ஸில் புரட்சிக்கால கட்டமாகக் காணப்பட்டது. பிரான்ஸின் டியூல்லரி அரண்மனை, மக் கள் கூட்டத்தால் கைப்பற்றப்பட்டது. மன் னன் பதவி நீக்கப்பட்டான். துருப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தி மக்கள் கிளர்ச்சியை அடக்குவதோடு டியூல்லரி அரண்மனை யைக் கைப்பற்றும் பொறுப்பு இவனுக்கு வழங்கப்பட்டது. 1793ஆம் ஆண்டே படை யெடுத்துச் சென்று டியூல்லரி அரண்மனை யை மீட்டுக் கொடுத்தான். இதனால் இவனுக்குப் பதவியுயர்வு வழங்கப்பட்டது.
சமகாலத்தில் தேசிய பேரவையின் செயற்பாடுகளினால் நம்பிக்கை இழந்த மக்கள் அதனை சுற்றி வளைத்திருந்தனர். தன்னுடைய நடவடிக்கையின் மூலம் தேசிய பேரவை உறுப்பினர்களை மீட்டெடுத்தான். இதற்குப் பிரதி உபகாரமாக பிரான்ஸின் இராணுவத் தளபதியாக நியமிக்கட்டான். இது இவனின் பிற்பட்டகால எழுச்சியைப் புலப்படுத்தி நின்றது.
மேலும் இத்தாலியின் மீதான படையெடுப்பிற்குத் தலைமை தாங்கிச் சென்றான். இதில் இவன் பெற்ற வெற்றியின் காரணமாக புகழின் உச்சிக்கே சென்றான். இருப்பினும் எகிப்திய படையெடுப்பில் தோல்வியைத் தழுவிக் கொண்டு திரும்பியபோது டைரக்டரி நிர்வாகம் பிரச்சினைக்குள்ளாகியிருந்தது. மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். 1799ஆம் ஆண்டு டைரக்டரியினுள் புகுந்து உணர்ச்சி பூர்வமான உரையை ஆற்றி புரட்சியின் குழந்தையாக அவதரித்தான். இவன் மக்கள் மத்தியில் தன்னை ஆட்சியாளனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டான். இந்த நடவடிக்கை தொடர்பில் கருத்துக்கூறுகையில் ‘பிரான்ஸின் மணிமுடி நிலத்தில் வீழ்ந்து கிடந்ததைக் கண்டேன். அதை வாளால் எடுத்து அணிந்து கொண்டேன்’. என தன்னுடைய உயர்வுக்கு யுத்தத்தைக் கருவியாக்கிக் கொண்டான். ஏழை ஒருவனின் மகன் மாபெரும் நாட்டின் சக்கரவர்த்தி ஆகின்ற அற்புதம் அன்றைக்கு நிகழ்ந்தது.
பின்னர் அரசாங்கத்துறை, நிதித்துறை, நீதி த்துறை, தொழில்துறை ஊக்குவிப்புக் கள், கல்வித்துறை மற்றும் சமூகநலப் பணி கள் என அனைத்திலும் பழைமை முறையை ஒழித்து புதிய சீர்திருத்தங்களை ஏற்படுத் தினான். ஒரே நேரத்தில் போரிலும் ஈடுபட்டுக்கொண்டு நாட்டையும் வளப்படுத்துவ தில் ஈடுபட்டான். இவன் 68 போர்க்களங்க ளில் தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றிவாகை சூடினான். இருப்பினும் இறு தியில் இவன் நடைமுறைப்படுத்திய கண்டதிட்டக் கொள்கையும் ரஷ்யா மீதான படையெடுப்பும் இவனது தோல்விக்குக் காரணமாக அமைந்தது.
நெப்போலியனின் வாழ்க்கை வெறும் வரலாற்றுத் தகவல்களாக இல்லாமல் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் செய்திகளையும் உள்ளடக்கியது. இவனுடைய வாழ்க்கை மிகவும் சிக்கனமாகவே அமைந்திருந்தது. குறிப்பாக ஓரிரு சேட்களையே அணிந்து கொண்டான். தன் அறைகளில் பதினான்கு ஆண்டுகால சம்பளத்தில் வாங்கிய மேசை, நாற்காலிகளையே வைத்திருந்தான். அத்தோடு இருவேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் பழக்கமும் அவனுக்கிருந்தது. அரைக்குவளைத் தேனீரை இரண்டு அல்லது மூன்று முறை அருந்தும் இவன் எந்தநேர மும் சுறுசுறுப்பாக வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படுவானாம்.
இவனால் இயற்றப்பட்ட சட்டக்கோவை ‘நெப்போலியன் சட்டக்கோவை’ என அழைக்கப்படுகின்றது. தற்போது பல நாடு களிலும் சட்டக் கல்லூரிகளி லும் இது ஏற் றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவன் சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும் நிர்வாகியாகவும் தலைமைப்பண்பு மிக்கவனாகவும் திகழ்ந்தான். தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பது அறிவை வளர்த்துக் கொள் வதற்கு வழிவகுக்கும் என சிறுவயதிலிருந்தே புத்தகங்களைக் காதலிக்கத் தொட ங்கி விட்டான். இப்பழக்கம் பிரான்சியச் சக்கரவர்த்தியாக இருந்த காலத்திலும்சரி ஹெலெனாவில் சிறைச்சாலையில் இருந்த காலத்திலும்சரி ஏன் தனது இறுதிநாள்வரை யிலும் புத்தகங்களுடனே காலம் கழித்தான்.
ஒருதடவை 1808ஆம் ஆண்டு போர்த்தருணத்தில் படைகளை நடாத்திச் சென்றிருக்க நெப்போலியன் தன் நூலகப் பொறுப்பாளருக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் நடமா டும் நூலகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். 1000 புத்தகங்களை மிகவும் சிறிய எழுத்துக் களில் பிரின்ட் செய்து அனுப்பவும் என் றெழுதியிருந்தது. அதன்படி அவர் எங்கு படைகளுடன் சென்றாலும் அங்கு இந்த நூலகம் இருக்கும்.
இவன் நேரமேலாண்மையின் தளபதியாக இருந்தான். ‘இந்த நிமிடத்தில் வாழுங்கள்’ என்பதே இவனுடைய மிகமுக்கியமான வாழ்க்கைத் தத்துவமாகும்.
இவனுக்கு தன்னைவிட இரண்டாண்டுகள் மூத்தவளும் இரண்டு பிள்ளைகளின் தாயு மான ஜோசப்பின் மீது முதல் பார்வை யிலே காதல் கொண்டு அவளை மணம் செய்து கொண்டான். அவளுக்காக உலகம் முழுவதும் இருந்து ரோஜா மலர்ச் செடி களை பரிசாக அளித்தான். மனைவியை விவாகரத்து செய்த பின்னும் மாளிகையில் இருந்து அவளுக்காக கண்ணீர் வடித்தான்.
இவனது வம்சத்தினருக்கு இருந்த இரை ப்பை புற்றுநோயின் காரணமாகவே இவன் இறந்தான் என நம்பப்படுகின்றது. இவன் தனது புகைப்படங்கள் அனைத்திலுமே தன் வலக்கையை சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால்தான் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அஞ்சா நெஞ்சமும் கடின உழைப்பும் திட்டமிட்டு செயலாற்றிய தீரமும் எதிரிக ளையும் அரவணைத்துச் செல்லும் இனிய பண்பும்தான் நெப்போலியனை வரலா ற் றில் பேசவைத்தது. வீரம் நிறைந்த நெப் போலியனின் உடல் மண்ணுக்கு இரையாகி மறைந்தாலும் அந்த மாவீரனின் புகழ் உலக வரலாறு உள்ளவரை வரலாற்றில் பேசப்ப டும் என்பது திண்ணம்.
பொன்னுத்துரை நிலாந்தினி,
கிழக்குப்பல்கலைக்கழகம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக