அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

“முருகுப்பிள்ளை நிர்மலன்” விபத்தில் காலமானார்.

நிமோ என எல்லோராலும் அறியப்பட்ட முருகுப்பிள்ளை நிர்மலன் இலங்கையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அகால மரணமானார். ரெலோ இயக்கத்தின் முன்னாள் போராளீயான இவர் ஜேர்மனியில் வசித்து வந்தவர்.

இவர் ஒரு மேடைக் கலைஞருமாவார். நிமோவின் தந்தையாரும் ஒரு கலைஞர் ஆவார்.ரி.பி.சி வானோலியின் முக்கிய அறிவிப்பாளராகவும்,நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அரசியல் ஆய்வாளராகவும் சேவை செய்த இவர் ஐரோப்பாவில் புலிப் பினாமிகளால் பலத்த நெருக்கடிக்குள்ளாகியிருந்தவர்..

ரி.பி.சி வானொலியின் பணிப்பாளர் ராமராஜ் வங்கி அட்டை மோசடியின் காரணமாக சுவிஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவித்தபோது தனது குடும்ப நலன்களைக்கூடக் கைவிட்டு ரி.பி.சி வானொலியை ஒரு வருடமாக பொறுப்பேற்று நடத்தியவர்

நிமோ அவர்கள். நிமோ அங்கு பணியாறிய வேளையில் ரி.பி.சி வானொலி புலிப் பினாமிகளால் சேதமாக்கப்பட்டது. ஆனால் சிறைத்தண்டனை முடிந்து மீண்டும் லண்டனுக்கு வந்த ராமராஜ் நிமோவை வெளியேற்றி தனது நன்றிக்கடனைத் தீர்த்துக் கொண்டது ரி.பி.சி வானொலியின் நேயர்கள் அறிவார்கள்.

புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் வெளீநாட்டு வாழ்க்கையைத் துறந்து மீண்டும் இலங்கை சென்று தனது சமூகப்பணிகளை மேற்கொண்ட நிமோ அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாததும் ஜீரணித்துக்கொள்ள முடியாததுமாகும். அவரது கும்பத்தினருக்கு சலசலப்பு இணையத்தி சார்பாக வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சலசலப்பு

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக