அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

வேர்ட் டாகுமெண்ட் பிரிண்ட்

வேர்ட் டாகுமெண்ட் பிரிண்ட் செய்கையில், முதல் பக்கம் முதலில் பிரிண்ட் செய்யப்பட்டு, தொடர்ந்து அடுத்த பக்கங்கள் பிரிண்ட் செய்யப்பட்டு கிடைக்கின்றன. பெரிய டாகுமெண்ட் ஆக, 60 பக்கம் இருந்தால், அச்சிட்ட பின்னர், மீண்டும் ஒவ்வொரு தாளையும், பார்த்து முதலில் இருந்து அமைக்க வேண்டியுள்ளது.

இதற்குப் பதிலாக வேறு வழி:

மிக அதிக எண்ணிக்கையில் பக்கங்கள் கொண்ட டாகுமெண்ட் அச்செடுக்கையில் இந்த பிரச்னை ஏற்படும். நாம் அருகில் இருந்து, ஒவ்வொரு பக்கமாக எடுத்து வரிசையாக அடுக்க வேண்டும். இதனைத் தவிர்க்க, டாகுமெண்ட்டினை, அதன் இறுதிப் பக்கத்திலிருந்து அச்சிடுமாறு செட்டிங்ஸ் அமைக்கலாம். இதனை அமைக்க கீழ்க்குறித்தபடி செயல்படவும்.

Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும்.

நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் "Printing options' என்ற பகுதியில் உள்ள "Reverse print order' என்பதில் கிளிக் செய்திடவும்.

பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக