அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

வண்ணங்களில் டைட்டில் பார்

கலர்புல் டிப்ஸ் ஒன்றைப் பார்ப்போமா! உங்களுடைய விண்டோ டைட்டில் பாரினை வெவ்வேறான வண்ணங்களில் அழகாய் இதன் மூலம் அமைக்கலாம். எது டைட்டில் பார்? எனச் சற்று நேரம் யோசிக்கிறீர்களா!

விண்டோவின் மேலாக மினிமைஸ், மேக்ஸிமைஸ் மற்றும் புரோகிராம் குளோஸ் செய்திடும் பட்டன்களைத் தன் வலது பக்கம் கொண்டு உள்ளது அல்லவா! அதுதான் விண்டோ டைட்டில் பார். இதன் வண்ணங்களை மாற்றுவது குறித்து பார்ப்போம்.

1. டெஸ்க் டாப்பில் எங்கேனும் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுங்கள்.

2. இப்போது உங்கள் டிஸ்பிளே செட்டிங்ஸ் எழுந்து வரும். இந்த விண்டோவில் Appearance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால் Advanced பட்டனைக் கிளிக் செய்திடுங்கள்.

"Item" என்று உள்ள கீழ் விரியும் கட்டத்தில் கிளிக் செய்திடவும்.

அந்த பட்டியலில் Active Title Bar என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த பட்டியல் கட்டத்தின் வலது பக்கம் இரண்டு கூடுதல் கட்டங்கள் "Color" மற்றும் "Color2" எனக் கிடைக்கும்.

முதல் வண்ணப் பெட்டி உங்கள் டைட்டில் பாரில் அமைந்திடும் முதல் வண்ணமாகும். இரண்டாவது வண்ணத்தில் தான் முதல் வண்ணம் தேய்ந்து மறைந்திடும்.

இந்த வண்ணங்களில் இருந்து நீங்கள் விரும்பும் வண்ணங்களை உங்கள் கற்பனைக்கேற்ப தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

உங்கள் விண்டோ விதம் விதமான வண்ணக் கலவைகளில் அமைவதனை வேடிக்கை பார்க்கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக